PulseNews
அரசியல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைப்பு; அதிருப்தியில் தொண்டர்கள்!

முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட்(Z) பிரிவு பாதுகாப்பு தற்போது வாபஸ் பெற்றுள்ளது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மு.க.ஸ்டாலின் கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த போது அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவானது வழங்கப்பட்டிருந்தது. அந்த இசட் பிளஸ் பாதுகாப்பில் சிறப்பு பிரிவைச் சேர்ந்த வீரர்கள், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், மத்திய பாதுகாப்பு படை என மொத்தம் 55க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் இடம்பெற்றிருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் சில குண்டு தொலைக்காத காரும் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் ஆட்சியை இழந்தது மட்டுமல்லாமல் தனது சொந்த தொகுதியில் தோல்வியடைந்த எம்.எல்.ஏ பதவியையும் இழந்தார். அதனால், அவருக்கு வழங்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் எஸ்காட் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த எஸ்காட் பாதுகாப்பு பிரிவில் ஒரு எஸ்.ஐ தலைமையிலான 4 போலீசார் இடம்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமிக்கும் எஸ்காட் பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் மு.க.ஸ்டாலினுக்கு எஸ்காட் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைப்பு; அதிருப்தியில் தொண்டர்கள்!
PulseNews சுருக்கம்

முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் (Z+) பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. கடந்த ஆட்சியில் அவர் முதல்வராக இருந்தபோது, மத்திய பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் சிறப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் என 55-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் அவருக்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தற்போது இந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டிருப்பது திமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த உயர்மட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட விவகாரத்தில் கட்சியின் ஆதரவாளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics