30 நாள் கெடு... அதிகாரிகளுக்கு செக் வைத்த காஞ்சிபுரம் ஆட்சியர் சினேகாவின் அதிரடி உத்தரவு!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சினேகா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, புதிய ரேஷன் கார்டு, உதவித்தொகை, வேளாண்மைத் துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சி, ஆதிதிராவிடர் நலத்துறை, கூட்டுறவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக மொத்தம் 466 மனுக்களை அளித்தனர். மேலும் வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் சார்ந்த கோரிக்கைகளும் பெறப்பட்டன. மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய விசாரணை நடத்தி, தகுதியான கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

நிலுவை மனுக்கள் குறித்து ஆய்வு

தொடர்ந்து, மக்கள் குறைதீர்க்கும் நாள், மக்கள் தொடர்பு முகாம், முதலமைச்சரின் தனிப் பிரிவு, முதலமைச்சரின் முகவரி, 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' உள்ளிட்ட வழிகளில் பெறப்பட்ட மனுக்களின் நிலுவை விவரங்கள் குறித்து துறை வாரியாக ஆட்சியர் ஆய்வு செய்தார். குறிப்பாக, நில அளவைப் பிரிவில் வட்டம் வாரியாக நிலுவையில் உள்ள மனுக்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் தற்போதைய நிலை குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.

துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

15 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி, ஒரு மாதத்திற்குள் கட்டாயம் தீர்வு காண வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டார். ஆறு மாதம், ஒரு ஆண்டு என நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மனுக்களை அடுத்த கூட்டத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும், அவ்வாறு முடிக்கப்படாத மனுக்களை அடுத்த கூட்டத்தில் நேரடியாகக் கொண்டுவந்து அவற்றுக்கான காரணங்களை அலுவலர்கள் விளக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் பதில்கள் தெளிவாகவும், மீண்டும் அதே பிரச்சனை தொடர்பாக பொதுமக்கள் குறை தெரிவிக்காத வகையில் தரமானதாகவும் இருக்க வேண்டும் என ஆட்சியர் சினேகா அறிவுறுத்தினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சினேகா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, புதிய ரேஷன் கார்டு, உதவித்தொகை மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 466 மனுக்களை சமர்ப்பித்தனர்.
வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் சார்ந்த கோரிக்கைகளையும் உள்ளடக்கிய இந்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் சினேகா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.