உதயநிதியை கைது செய்த தவெக அரசுக்கு திமுக கண்டனம்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வடக்கு மண்டல வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர் கட்சித்தலைவருமான உதயநிதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை எப்படி எதிர்கொள்வது எதிர்க்கட்சிகளின் புகார்களுக்குச் சட்ட ரீதியாக எப்படி பதிலளிப்பது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும் சமூக வலைதளங்களில் பரவும் அவதூறு தகவல்களை எப்படி எதிர்கொள்வது குறித்தும் தொகுதி வாரியாக வழக்கறிஞர் அணியை எப்படி வலுப்படுத்த வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேகதாது விவகாரத்தில் தவெக ஆட்சியின் அலட்சியப்போக்கைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் கைதுக்கு கண்டனம் தெரிவித்தும் முன்னாள் முதல்வர் கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் மீது சமூக வலைதளங்களில் அருவருக்கத்தக்க வகையில் காவல் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கைகள் எடுக்காதது குறித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதே போல் கோவை மாணவர் அமுதன் கொலை சம்பவம், குற்ற நிகழ்வுகள் அதிகரிப்பது, பாலியல் வன்கொடுமைகள் போன்ற விஷயங்களுக்கு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இம்மாத தொடக்கத்தி தஞ்சாவூரில் முதல்வர் விஜயை அவதூறு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டு தஞ்சை அருகே செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்குப் பிறகு இரவில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் வடக்கு மண்டல வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை எதிர்கொள்வது குறித்தும், எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு சட்டப்பூர்வமாக பதிலளிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறுகளை கையாள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. உதயநிதி கைது செய்யப்பட்டதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.