சிஜேபியினர் மீது நடத்தப்பட்ட வன்@றை; அபிஜித் தீப்கே பாஜகவிற்கு எச்சரிக்கை
’கரப்பான் பூச்சி கட்சி’யினர் (சிஜேபி) ’பள்ளிகளைச் சரி செய்யுங்கள்’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் சீரமைக்கப்பட வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்பதே இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சிஜேபி அமைப்பினர் பள்ளிகளை ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) போன்ற இடங்களில் பழுதடைந்த அரசுப் பள்ளி உள்கட்டமைப்புகளை சிஜேபி அமைப்பினர் ஆய்வு செய்தனர். அப்போது, ஜெய்ப்பூரில் மாவட்டத்தில் உள்ள ராம்புரா-கன்வார்புரா கிராமத்தில் உள்ள பள்ளியில் இணை ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா உள்ளிட்ட சிஜேபி அமைப்பினர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீது ஒரு கும்பல் கல் வீசி தாக்குதல், வாகனங்களைச் சேதப்படுத்துதல் மற்றும் உடல்ரீதியான தாக்குதல்களை நடத்தின. இந்த சம்பவம் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தை சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே கடுமையாகக் கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாநில கல்வித் துறை அமைச்சர் மதன்திலாவர் உத்தரவின் பேரில் பாஜகவினர் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். பாஜகவினரின் வன்முறை போக்கை நாடு முழுவதும் உள்ள மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றனர். தாக்குதல் நடத்தியவர்களை 48 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் மீண்டும் போராட்டம் தொடங்கும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'கரப்பான் பூச்சி கட்சி' (சிஜேபி) அமைப்பினர், நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் சீரமைத்து, அனைவருக்கும் தரமான கல்வியை வழங்க வலியுறுத்தி 'பள்ளிகளைச் சரி செய்யுங்கள்' என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பழுதடைந்துள்ள உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்ய இந்த அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில், சிஜேபி அமைப்பினர் மீது நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அபிஜித் தீப்கே பாஜகவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.