PulseNews
அரசியல்

மது போதையில் மேடை ஏறிய இளைஞரால் பரபரப்பு; டென்ஷனான பெ.சண்முகம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 26 - 31 வரை தமிழ்நாடு முழுவதும் ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ எனும் பிரச்சாரம் இயக்கம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அந்த வகையில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த பிரச்சார இயக்கம் கடந்த 26ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று (30-08-26) திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி.கண்டிகை என்ற பகுதியில் கிராமப்புற வேலை உறுதி, பழங்குகுடி குழந்தைகள் கல்வி நலன், பெண் குழந்தைகள் கல்வி நலன் ஆகியவற்றை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தார். அப்போது மது போதையில் இளைஞர் ஒருவர், பெ.சண்முகம் அருகில் வந்து, நானும் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது பெ.சண்முகம் அவரை கீழே அமறுமாறு கூறினார். கீழே இறங்கிய அந்த மது போதை இளைஞர், பெ.சண்முகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்துள்ளார். இதில் பெ.சண்முகம் ஆத்திரமடைந்து, அந்த இளைஞரை கண்டித்து அங்கிருந்து செல்லுமாறு கூறினார். இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர், அந்த இளைஞரை கண்டித்து அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் அந்த இளைஞர், கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பானது. இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அந்த இளைஞரை அங்கிருந்து அனுப்பினர்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மது போதையில் மேடை ஏறிய இளைஞரால் பரபரப்பு; டென்ஷனான பெ.சண்முகம்!
PulseNews சுருக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 26 முதல் 31 வரை தமிழ்நாடு முழுவதும் 'மக்கள் சந்திப்பு இயக்கம்' என்ற பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி.கண்டிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போது, போதையில் இருந்த இளைஞர் ஒருவர் திடீரென மேடை ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தால் மேடையிலிருந்த மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் அதிருப்தியும் டென்ஷனும் அடைந்தார். கிராமப்புற வேலை உறுதி மற்றும் பழங்குடியின குழந்தைகள் நலன் தொடர்பான கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics