'குட்கா வியாபாரிகளுக்கு ஆதரவு'-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் பணியிடை நீக்கம்
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் முருகன் ஆகியோர் குட்கா பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தஞ்சை மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கடந்த 11 ந் தேதி இரவு தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் மற்றும் கௌதமன், அழகிரிசாமி ஆகிய போலீசார் ஆய்வு செய்து சுமார் 80 கி குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். ஆனால், காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட குட்கா வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல் ஆய்வாளரால் விடுவிக்கப்பட்டனர் என்ற தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கவனத்திற்கு வந்த நிலையில் அவர்கள் இருவரையும் மீண்டும் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். எஸ்.பி யின் இந்த உத்தரவின் பேரில் தப்பிச் சென்ற இருவரையும் மீண்டும் அழைத்து வந்து கைது செய்தனர்.இந்த சம்பவத்தில் குட்கா வியாபாரிககளுக்கு ஆதரவாக செயல்பட்ட தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் அவருக்கு துணையாக இருந்த போலீசார் கௌதம், அழகிரிசாமி மீதும் நடவடிக்கை எடுக்க தஞ்சாவூர் எஸ்.பி சுந்தரவதனம், தஞ்சை சரக டி.ஐ.ஜி ஜியாவுல்கக்கிற்கு பரிந்துரை செய்த நிலையில் இன்று காவல் ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீசார் பணியிடை நீக்கம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பாக உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் முருகன் ஆகியோர் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலின் பேரில், தஞ்சை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவலர்கள் கௌதமன், அழகிரிசாமி ஆகியோர் கடந்த 11-ம் தேதி இரவு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 80 கிலோ குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்து அந்த இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட குட்கா வியாபாரிகள் மீது சட்டப்பூர்வமாக வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, ஆய்வாளர் சண்முகம் உள்ளிட்ட 3 காவல்துறையினரையும் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.