ஆதாரமற்ற வழக்குகள் தொடர்ந்தால் அபராதம்: தவெக எம்எல்ஏ வழக்கில் மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
தவெக மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன் தொடர்பான வழக்கை, எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு, மனுவில் முன்வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்பதை சுட்டிக்காட்டியது.
தமிழக வெற்றி கழகத்தின் மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன் தொடர்பான வழக்கை, எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையின்போது, மனுதாரர் முன்வைத்துள்ள முக்கிய குற்றச்சாட்டுக்குத் தேவையான போதிய ஆதாரங்கள் இல்லை என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. ஆதாரமற்ற வழக்குகளைத் தொடர்ந்து தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.