வலி வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்: ஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினரிடம் வாக்குமூலம் பதிவு
பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்திடம் பலாலி காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். வலி வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி, பலாலி மற்றும் மயிலிட்டி பகுதி மக்களால் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டங்களுக்கு ஈ.பி.டி.பி கட்சியினர் தொடர்ந்தும் ஆதரவு வழங்கி வருகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு&n...

வலி வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்கக் கோரி இடம்பெற்று வரும் போராட்டங்களில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்திடமிருந்து பலாலி காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
வலி வடக்கில் உள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தி பலாலி மற்றும் மயிலிட்டி பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். இப்போராட்டங்களுக்கு ஈ.பி.டி.பி கட்சியினர் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.