அபுதாபி போறவங்களுக்கு விசா ஃப்ரீ... இந்தியர்களுக்கு அமீரக அரசு கொடுத்த அதிரடி ஆஃபர்
வரும் மாதங்களில் அபுதாபிக்குச் செல்லத் திட்டமிட்டிருக்கும் இந்தியப் பயணிகளுக்கு ஒரு சூப்பர் செய்தி! அபுதாபியின் பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை (DCT Abu Dhabi) புதிய சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள இந்தியப் பயணிகளுக்கு இலவச அமீரக விசா வழங்கிட முடிவு செய்துள்ளது. இருப்பினும், சாதரணமாக அமீரகத்திற்கு விமான டிக்கெட் மட்டும் பதிவு செய்பவர்களுக்கு இந்த இலவச விசா கிடைக்காது. இதன் பின்னணியில் ஒரு முக்கிய நிபந்தனை உள்ளது. தண்ணி குடிச்சா நீரில் நாக்கு ஒட்டிவிடும்... செத்தா கூட அடக்கம் பண்ண முடியாது; நிலத்தை தீ வைத்து எரிக்கும் விசித்திர நாடு சலுகை எப்போது வரை செல்லுபடியாகும்? இத்திட்டம் ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 31, 2026 வரை செயல்பாட்டில் இருக்கும். முதற்கட்டமாக முதல் 20,000 விசாக்களுக்கு மட்டுமே இந்த இலவச சலுகை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், அபுதாபி சுற்றுலாத் துறையுடன் இணைந்த அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் (Travel Partners) அல்லது ஆன்லைன் சுற்றுலா தளங்கள் (OTAs) மூலமாகத் தகுதியுள்ள ஹாலிடே பேக்கேஜ்களை முன்பதிவு செய்யும் பயணிகளின் விசா கட்டணத்தை அபுதாபி அரசே ஏற்கும். இலவச விசா பெற யாருக்கு தகுதி உண்டு? இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் மற்றும் இந்தியாவிலிருந்து புறப்படும் பயணிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும். அவர்கள் பின்வரும் 3 முக்கிய நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்: அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சி: அபுதாபி சுற்றுலாத் துறையுடன் இணைந்த டிராவல் ஏஜென்சி அல்லது ஆன்லைன் தளம் மூலமாகவே 'அபுதாபி ஹாலிடே பேக்கேஜ்' பதிவு செய்யப்பட வேண்டும். 3 நாட்கள் தங்குவது கட்டாயம்: அபுதாபியில் உள்ள ஹோட்டலில் குறைந்தது தொடர்ந்து 3 இரவுகள் தங்கியிருக்க வேண்டும். ரிட்டர்ன் டிக்கெட்: இந்தியாவில் இருந்து புறப்பட்டு, மீண்டும் இந்தியாவிற்கே திரும்புவதற்கான ரிட்டர்ன் பிளைட் டிக்கெட் வைத்திருக்க வேண்டும். தனித்தனியாக டிக்கெட் பதிவு செய்தால் இலவச விசா கிடைக்குமா? விமான டிக்கெட்டை ஒரு தளத்திலும், ஹோட்டலை மற்றொரு தளத்திலும் தனித்தனியாகப் பதிவு செய்தால் இந்தச் சலுகை பெற முடியாது. எனவே, கட்டணம் செலுத்துவதற்கு முன்பாக நீங்கள் முன்பதிவு செய்யும் டிராவல் ஏஜென்சி அபுதாபி அரசின் (DCT Abu Dhabi) இந்த இலவச விசா திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். இத்திட்டம் எவ்வாறு செயல்படுகிறது? தகுதியான பேக்கேஜை முன்பதிவு செய்யும் பயணிகளிடம் விசா கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இதற்காக அபுதாபி அரசு, டிராவல் ஏஜென்சிகள் வழங்கும் ஒவ்வொரு விசாவிற்கும் ஆகும் செலவான 285 திர்ஹாம் தொகையை நேரடியாக ஏஜென்சிகளுக்குத் திரும்ப வழங்கிவிடும். பயணிகளைப் பொறுத்தவரை எந்தக் கூடுதல் விசா கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. முன்பதிவு செய்யும் முன் கவனிக்க வேண்டியவை நீங்கள் வாங்கும் பேக்கேஜ் இத்திட்டத்தின் கீழ் வருகிறதா என்பதை டிராவல் ஏஜென்சியிடம் முன்பே கேட்டு உறுதிசெய்யவும். ஹோட்டல் தங்குமிடம் குறைந்தது தொடர்ந்து 3 இரவுகள் இருக்க வேண்டும். இத்திட்டம் 20,000 விசாக்களுக்கு மட்டுமே என்பதால், முன்பதிவு செய்யும் போது விசா கோட்டா இருக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும்.

அபுதாபிக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ள இந்தியப் பயணிகளுக்கு, அந்நாட்டின் பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, தகுதியுள்ள இந்தியப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், இந்தச் சலுகையைப் பெறுவதற்குச் சில குறிப்பிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. சாதாரணமான விமானப் பயணச் சீட்டுகளை மட்டும் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு இந்த இலவச விசா வழங்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.