PulseNews
அரசியல்

தமிழை இழிவுபடுத்தினாரா? வம்பில் சிக்கிய அமைச்சர்.. வச்சு செய்த நெட்டிசன்கள்..! மனம் மா(ற்)றிய பின்னணி..!

தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நிதியமைச்சர் பட்ஜெட்டை வாசித்தபோது அவருடைய உச்சரிப்பு நேர்த்தியாக இல்லை என்றும், தமிழில் சில சொற்கள் இலக்கணப் பிழையுடன் இருந்ததாகவும் குறிப்பிட்டார். ஆவேசமான அமைச்சர்..! அப்போது, அதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், தான் 30 வருடங்களாக கல்வி துறையில் இருக்கிறேன், என்னுடைய உரையாடல் ஆங்கிலத்தில் தான் இருந்துள்ளது. கொஞ்ச நாளாகவே உருவ கேலி செய்து இப்போது மொழி வரை வந்துவிட்டார்கள். என்னுடைய மொழி அன்பு மொழி, அமைதி மொழி என்றவர், இது பாதிப்பேருக்கு எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது என்றார். மேலும், தான் கிறித்துவ மதத்தை சேர்ந்தவன். என்னுடைய தனித்தன்மை இது தான், உங்களுக்காக நான் மாற்றிக் கொள்ள முடியாது என ஆவேசத்தோடு பேசி, மைக்கை தட்டியபடி அமர்ந்தார். வாயை கொடுத்து வம்பில் சிக்கினார்..! இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மதத்திற்கும் மொழிக்கும் சம்மந்தம் இல்லை. வீரமா முனிவர், கால்டுவெல் போன்ற வெளிநாட்டவர்களே இங்கு வந்து தமிழ் மொழியை திறம்பட கற்றுக் கொண்டார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். இன்னும் சிலர், அவர் "பாதிப்பேருக்கு எவ்வளவு தமிழ் படித்தாலும் இது தெரியாது" என்று சொல்லியிருக்காரே, உலகின் மூத்த மொழியான தமிழை இப்படி இழிவுபடுத்தலாமா? என ஆவேசமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதே நேரம், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பொறுமையாக மரியாதையோடு தானே கேள்வி எழுப்பினார், அதற்கு இப்படி ஆவேசமாக பேசி மைக்கை தட்டிவிடுவது நியாயமா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர். சீமான் கண்டனம்..! தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்னைத்தமிழை அவமதிக்கும் வகையிலே, பேசிய அமைச்சர் மரியவில்சன் தன்னுடையப் பேச்சுக்கு, அதே அவையில் மனம்வருந்தி மன்னிப்புக் கோர வேண்டும் என சீமான் அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்தார். நயினார் நாகேந்திரன் கேள்வி..! தமிழ் மொழியின் ஆளுமையுடன், ஒரு மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரியா? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். அவர்தானா இவர்..! மனம் மா(ற்)றிய பின்னணி இப்படி ஏராளமானோர் எதிர் குரல் எழுப்பி வந்த நிலையில், சட்டமன்றத்திற்கு வந்த நிதியமைச்சர் மரிய வில்சன், திங்கட்கிழமை திமுக உறுப்பினர் கேள்விக்கு அவர் தானா இவர் என்று சொல்லுமளவுக்கு பொறுமையாக பதில் அளித்ததோடு, தான் முந்தின நாள் ஆத்திரப் பட்டது தவறு என்பது போல சுட்டிக் காட்டினார். மேலும், முதலமைச்சர் விஜய்யை வாழ்த்தும் விதமாக குட்டி ஸ்டோரி ஒன்றை சொல்லியதோடு, தங்கள் குடும்பத்தை வாழவைத்ததாக எம்.ஜி.ஆரின் புகழையும் பாட ஆரம்பித்தார். இதனை பார்த்த பலரும், பரவாயில்லையே, விமர்சனங்களை புரிந்து கொண்டு ஒரே இரவில் இப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளதே என மரிய வில்சனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரம், புதிதாக வந்ததால், வரும் காலங்களில் இவற்றை எல்லாம் சரி செய்து கொள்வார்கள் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Polimer News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தமிழை இழிவுபடுத்தினாரா? வம்பில் சிக்கிய அமைச்சர்.. வச்சு செய்த நெட்டிசன்கள்..! மனம் மா(ற்)றிய பின்னணி..!
PulseNews சுருக்கம்

தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, கடையநல்லூர் எம்.எல்.ஏ ராஜேந்திரன் நிதி அமைச்சர் பட்ஜெட் வாசிக்கும்போது உச்சரிப்பு சரியாக இல்லை என்றும், சில சொற்கள் இலக்கணப் பிழையுடன் இருந்ததாகவும் விமர்சித்தார். இதற்குப் பதிலளித்த நிதி அமைச்சர் மரிய வில்சன், தான் 30 ஆண்டுகளாகக் கல்வித்துறையில் பணியாற்றி வருவதாகவும், தனது உரையாடல்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருந்துள்ளதாகவும் விளக்கமளித்தார்.

தன்னைத் தொடர்ந்து உருவக்கேலி செய்து வந்தவர்கள், தற்போது மொழி ரீதியாகவும் விமர்சிப்பதாக அமைச்சர் வருத்தம் தெரிவித்தார். தனது மொழி அன்பான மொழி என்று குறிப்பிட்ட அவர், இச்சம்பவம் தொடர்பாக இணையதளவாசிகள் மத்தியில் கடும் விவாதங்கள் எழுந்ததைத் தொடர்ந்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics