PulseNews
அரசியல்

“தொலைந்துபோன அமைதியை மீட்டெடுக்க அரிய வாய்ப்பு” - தவெக அமைச்சருக்கு சீனு ராமசாமி நன்றி!

தமிழகத்தில் உள்ள முக்கியமான 52 முதுநிலைக் கோயில்களில் இன்று முதல் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் திருத்தனி, திருப்பரங்குன்றம், வடபழனி, குன்றத்தூர் ஆகிய முருகன் கோயில்கள், பெரியபாளையம், காஞ்சிபுரம், திருவேற்காடு, திருவல்லிக்கேணி, திருவெற்றியூர் வழியுடைய அம்மன் கோயில் உள்ளிட்ட இன்னும் பல கோயில்கள் அடங்கும். இதனால் பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க, கோயில் வளாகத்தில் செல்போன் பாதுகாப்பு பெட்டக வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் தங்களது செல்போன்களை ஒப்படைத்து ரூ.5 கட்டணம் செலுத்தி ரசீது அல்லது டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். சாமி தரிசனம் முடிந்த பிறகு அந்த டோக்கன்களை காண்பித்து செல்போன்களை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். இதை மீறி செல்போனை கோயில் உள்ளே எடுத்து செல்பவர்களுக்கு தகுந்த அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த புது நடவடிக்கைக்கு திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கோயிலுக்குள் நுழையும்போது வாசலில் செருப்பைக் கழற்றி வைப்பதைப் போல, 52 கோயில்களில் செல்போன் தடை என்பது தொலைந்துபோன நம் அமைதியை மீட்டெடுக்கக் கிடைத்த அரிய வாய்ப்பு. கேமரா ஃப்ளாஷ்கள் இல்லாத சந்நிதியில், நாம் இழந்துபோன நிசப்தம் மீண்டும் திரும்புவதை உணர்கிறோம். கூட்டம் வேகமாக நகர்வதற்கும், அருகில் இருப்போர் உரக்கப் பேசும் தொந்தரவைத் தவிர்ப்பதற்கும், செல்போன் திரையைத் தாண்டி சக மனிதரின் அன்பைப் புரிந்துகொள்ளவும், கோயில்களை 'ரீல்ஸ்' வீடியோக்களுக்காகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் வழிவகுத்த இந்த நல்ல மாற்றத்திற்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு நன்றி. வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“தொலைந்துபோன அமைதியை மீட்டெடுக்க அரிய வாய்ப்பு” - தவெக அமைச்சருக்கு சீனு ராமசாமி நன்றி!
PulseNews சுருக்கம்

தமிழகத்தில் உள்ள 52 முக்கிய முதுநிலைக் கோயில்களில் இன்று முதல் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. திருத்தனி, திருப்பரங்குன்றம், வடபழனி, குன்றத்தூர், பெரியபாளையம், காஞ்சிபுரம், திருவேற்காடு, திருவல்லிக்கேணி மற்றும் திருவொற்றியூர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க, அந்தந்த வளாகங்களில் பிரத்யேக பாதுகாப்பு பெட்டக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, கோயில்களில் அமைதியை மீட்டெடுக்க இந்த நடவடிக்கை ஒரு அரிய வாய்ப்பு என தெரிவித்து, தமிழக அமைச்சருக்கு இயக்குநர் சீனு ராமசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics