PulseNews
அரசியல்

வி.சி.க மாநாடு கூட்டம்; திருமா பத்திரமாக திரும்பியதே பெரிய விஷயம்: நேரில் பார்த்த தொகுப்பாளர் உமா ராஜாராம் விளக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவனின் பிறந்தநாளை (ஆகஸ்ட் 17) முன்னிட்டு, உளுந்தூர்பேட்டையில் வி.சி.க சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில், ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டால் உளுந்தூர்பேட்டை பகுதி முழுவதும் விழாக் கோலம் பூண்டது. மாநாடு இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய நிலையில், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தீபம் ஏந்தி ரேம்ப் வாக் செய்தார். அதனை தொடர்ந்து திருமாவளவன் உரை நிகழ்த்தினார். காலை முதலே மாநாடு நடைபெறும் இடத்துக்கு வி.சி.க தொண்டர்கள் குவிந்து வந்ததால் மாநாட்டில் கடும் கூட்டம் ஏற்பட்டது. மாநாட்டு மேடையிலும் தொண்டர்கள் குவிந்ததால், மேடையில் இருந்த திருமாவளவன் கடுப்பாகி தொண்டர்களை காட்டமாக பேசி அங்கிருந்து கீழே அனுப்பி வைத்தார். கூட்டம் முடிந்த போது அவர் மேடையில் இருந்து வெளியேற முயலுகையில், கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்தது. அந்த நெரிசல் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதியிலேயே பேச்சை முடித்து திருமாவளவன் திரும்பினார். அவர் கூட்டத்தில் சிக்கி சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பிரபல செய்தி தொலைக்காட்சி தொகுப்பாளர் உமா ராஜாராம், அங்கு என்ன நடந்து? என்பது குறித்து விவரித்துள்ளார்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வி.சி.க மாநாடு கூட்டம்; திருமா பத்திரமாக திரும்பியதே பெரிய விஷயம்: நேரில் பார்த்த தொகுப்பாளர் உமா ராஜாராம் விளக்கம்
PulseNews சுருக்கம்

உளுந்தூர்பேட்டையில் விசிக தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற 'தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு' பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சியுடன் திருமாவளவன் தீபம் ஏந்தி மேடையில் வலம் வந்து, பின்னர் சிறப்புரை ஆற்றினார்.

இந்த மாநாட்டைக் நேரில் பார்த்த தொகுப்பாளர் உமா ராஜாராம், கூட்ட நெரிசலுக்கு மத்தியில் திருமாவளவன் பத்திரமாகத் திரும்பியதே பெரிய விஷயம் என்று தனது விளக்கத்தை அளித்துள்ளார். மாநாட்டின் காரணமாக உளுந்தூர்பேட்டை பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics