PulseNews
அரசியல்

திரையில் மட்டுமல்ல... அரசியலிலும் அடுத்த ரவுண்ட்? - புதுச்சேரி தனுஷ் ரசிகர்களின் திடீர் மூவ்!

புதுச்சேரி: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றிய நிலையில், தற்போது நடிகர் தனுஷின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்களும் தீவிர சமூக நலப்பணிகளில் இறங்கியிருப்பது புதுச்சேரி மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

புதுச்சேரியில் மாணவர்கள் பயன்பெறும் நலத்திட்டங்கள்:

நடிகர் தனுஷின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், புதுச்சேரி மாநில தனுஷ் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலத் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் தொடர் கல்வி பயிலச் சிரமப்படும் மாணவ, மாணவிகள் நேரில் வரவழைக்கப்பட்டு, அவர்களின் கல்விச் செலவுக்கு உதவும் வகையில் கல்வி ஊக்கத்தொகையும், புத்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டன.

நற்பணி மன்றப் பாதையிலிருந்து அரசியல் களம்?

தமிழக அரசியலில் முன்னணி நடிகர்கள் தங்களது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றியும், பிறந்தநாட்களைப் மக்கள் நலத்திட்டப் பணிகளுக்கான தளமாகப் பயன்படுத்தியும் படிப்படியாக அரசியல் அடித்தளம் அமைப்பது நீண்டகாலப் பாரம்பரியமாக இருந்து வருகிறது. சமீபத்தில் நடிகர் விஜய் தனது 'விஜய் மக்கள் இயக்கம்' மூலம் கல்வி விருது விழாக்கள், விலையில்லா உணவகங்கள், ரத்த தான முகாம்கள் போன்ற மக்கள் நலப்பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, பின்னர் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி தீவிர அரசியல் களத்தில் இறங்கினார்.

தனுஷ் ரசிகர்கள் தீவிர கவனம் - புதுச்சேரியில் எழும் கேள்விகள்:

தற்போது அதே பாணியில் தனுஷ் ரசிகர்களும் கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நலப்பணிகளில் அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, புதுச்சேரியில் தனுஷ் நற்பணி மன்றத்தினர் முன்னெடுத்து வரும் இந்த மக்கள் நல நடவடிக்கைகள், "விஜய்யைத் தொடர்ந்து அடுத்த அரசியல் களத்தில் இறங்க தனுஷ் ஆயத்தமாகிறாரா?" என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை தனுஷ் தனது அரசியல் பிரவேசம் குறித்தோ அல்லது அரசியல் ஆசைகள் குறித்தோ எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், தனது நற்பணி மன்றத்தினரை மக்கள் சேவை மற்றும் ரத்த தான முகாம்களில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியிருப்பதும், ரசிகர்கள் மூலம் கல்வி நலத்திட்ட உதவிகளைப் பரவலாகச் செய்து வருவதும், எதிர்கால அரசியல் நகர்விற்கான ஒரு தொடக்கப் புள்ளியா என்ற எதிர்பார்ப்பைப் புதுச்சேரி மக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் வளர்த்துள்ளது.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
திரையில் மட்டுமல்ல... அரசியலிலும் அடுத்த ரவுண்ட்? - புதுச்சேரி தனுஷ் ரசிகர்களின் திடீர் மூவ்!
PulseNews சுருக்கம்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி, மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து, நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களும் தீவிர சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் தனுஷின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், மாணவர்கள் பயன்பெறும் வகையிலான நலத்திட்டங்களை அவரது ரசிகர்கள் முன்னெடுத்துள்ளனர். இவர்களின் இந்த திடீர் செயல்பாடுகள் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics