‘அண்ணாமலை பல்கலைக்கழக நிலத்தை விற்க வேண்டும்’ - எம்.எல்.ஏ பேச்சுக்கு எதிர்ப்பு!
அண்ணாமலை பல்கலைக்கழக நிலத்தை விற்க வேண்டும் என சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பேசியதற்கு மறுப்பு தெரிவித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி சுப்பிரமணியன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி பல்கலைக்கழகப் பிரச்சனைகள் பற்றி மிகச்சிறப்பாக ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் பேசியுள்ளார். அதற்கு எமது மனமார்ந்த நன்றிகளை அவருக்கு கூட்டமைப்பு சார்பாக உரித்தாக்குகிறோம். அதேசமயம் பல்கலைக்கழக நிலங்களை விற்பதை நாங்கள் ஏற்கவில்லை. அது எங்களது பரிந்துரை அல்ல. தமிழக அரசும் மிகப்பெரிய கடனில் தான் உள்ளது. அதற்காக தமிழக நிலப்பரப்புகளை அண்டை மாநிலங்களுக்கு விற்க இயலாது... தமிழக அரசு அதிக சிறப்பு நிதி ஒதுக்கி பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும். அதே நேரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 400 ஏக்கருக்கு மேல் கட்டிடங்கள் உள்ளது. அதனை பராமரித்து பாதுகாக்க வேண்டும். எம்.எல்.ஏ, 2 ஏக்கருக்கு தான் கட்டிடம் உள்ளது என கூறியது தவறானது. என தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பல்கலைக்கழக நிலங்களை விற்க வேண்டும் என்று சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கூறிய கருத்துக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகப் பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் பேசியதற்காக அந்த உறுப்பினருக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், பல்கலைக்கழக நிலங்களை விற்கும் பரிந்துரையை ஏற்க முடியாது என்று கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் 400 ஏக்கருக்கும் மேலாகக் கட்டிடங்கள் இருக்கும் நிலையில், அவை அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். கட்டிடங்கள் 2 ஏக்கரில் மட்டுமே இருப்பதாக எம்.எல்.ஏ கூறியது தவறான தகவல் எனச் சுட்டிக்காட்டிய அவர், அரசு சிறப்பு நிதியை ஒதுக்கி இப்பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி மற்றும் பிரச்சனைகளைச் சரிசெய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.