PulseNews
அரசியல்

“தவறுதான்... நான் சாரி கேட்டுக்கொள்கிறேன்” - மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!

4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை இன்று (17.08.2026) கூடியது. இந்நிலையில் சட்டப்பேரவை விவாதத்தின் போது, தவெக அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித் குமார் தனது உரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு வழக்கமாக வழங்கப்படும் 'கலைஞர்' என்ற மரியாதைக்குரிய அடைமொழி இல்லாமல் அவரது பெயரை மட்டும் குறிப்பிட்டுப் பேசினார். அதற்கு திமுகவினர் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்தச் சூழ்நிலையில் முதலமைச்சர் விஜய், “முதலில் உங்க தலைவரோட பேரை (மரியாதை இல்லாமல்) மென்ஷன் பண்ணிப் பேசினது தவறுதான். அவர் சார்பாக நான் சாரி கேட்டுக்கிறேன்” என்று அவையிலேயே பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். முதலமைச்சரின் இந்த உடனடி மற்றும் நாகரிகமான செயலால் அவையில் நிலவிய பதற்றம் தணிந்து, எதிர்க்கட்சியினர் அமைதியடைந்தனர். இதனைத் தொடர்ந்து தனது உரையைத் தொடர்ந்த முதலமைச்சர் விஜய், "தமிழக மக்கள் நம் உயிர் என்றால், தமிழக விவசாயிகள் நம் உயிர்நாடி" என்று கூறி வேளாண்மை கடன் தள்ளுபடி தொடர்பான் முக்கியக் அறிவிப்புகளை வெளியிட்டார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் நாகரிக அரசியலை வெளிப்படுத்தும் விதமாக சாரி கேட்ட இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களிலும், தமிழக அரசியல் வட்டாரங்களிலும் தற்போது முக்கியச் செய்தியாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“தவறுதான்... நான் சாரி கேட்டுக்கொள்கிறேன்” - மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!
PulseNews சுருக்கம்

நான்கு நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று (17.08.2026) கூடிய தமிழக சட்டப்பேரவையில், தவெக அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித் குமார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பெயரை மரியாதைக்குரிய அடைமொழி இன்றி குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு குறித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பெயரை மரியாதையின்றி குறிப்பிட்டது தவறுதான் என்று ஒப்புக்கொண்டார். இதற்காக அவர் அவையில் மன்னிப்பு கோரினார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics