மத்திய கிழக்கு போரில் ஒரு முடிவை தேடும் சர்வதேசம்! நோக்கி தெஹ்ரானுக்கு விரையும் ஆசிம் முனீர்
மத்திய கிழக்கு போருக்கு ஒரு தீர்வைக் காண பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய முயன்று வரும் நிலையில், அந்நாட்டின் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஈரானுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இதன்படி நாளை ஆசிம் முனீர் தனது விஜயத்தை மேற்கொள்வார் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரான்-பாகிஸ்தான் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக முனீர் ஈரானிய தலைநகருக்கு ஒரு தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்குவார் என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய...

மத்திய கிழக்கு போருக்குத் தீர்வு காணும் நோக்கில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய முயன்று வரும் வேளையில், அந்நாட்டு இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஈரானுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தத் தகவலை ஈரான் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி, நாளை தனது பயணத்தைத் தொடங்கும் ஆசிம் முனீர், ஈரான் தலைநகரான தெஹ்ரானுக்குச் செல்லும் தூதுக்குழு ஒன்றிற்குத் தலைமை தாங்கிச் செல்லவிருக்கிறார். ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முக்கிய பயணம் மேற்கொள்ளப்படுவதாக ஈரானிய அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய தெரிவித்துள்ளார்.