விவாதத்தைக் கிளப்பிய அமைச்சர் ரமேஷ்; தக்க பதிலடி கொடுத்த கே.என். நேரு!
4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை இன்று (17.08.2026) கூடியது. அப்போது அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பேசுகையில், “சிறிது நேரத்திற்கு முன்பாக பேசிய முன்னாள் முதல்வரும், அவையின் மூத்தவருமான ஓ.பி.எஸ்., சட்டமன்றத்தின் கண்ணியம் குறித்து நமக்கெல்லாம் சொல்லிக் கொடுத்திருந்தார். முதல் முறையாகச் சட்டமன்றத்திற்கு உறுப்பினராக வந்திருக்கக்கூடிய நாங்கள் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். அதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது. அதே சமயத்தில், பேரறிஞர் அண்ணா சொன்ன ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்பதையே தன்னுடைய மூச்சாக வைத்திருக்கக்கூடிய முதல்வர் விஜய்க்கும் அதற்கான கருத்தை இப்போது தெரிவித்துவிட்டார். முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய நான், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒரு சிறிய வேண்டுகோளையும் இந்த நேரத்தில் வைத்துக்கொள்கிறேன். எப்படி கண்ணியம் குறித்து ஓ. பன்னீர்செல்வம் எங்கள் எல்லாருக்கும் சொன்னாரோ, அதேபோல அவரது கட்சியினுடைய எதிர்க்கட்சித் தலைவருக்கும் சிறிதளவாவது நீங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஏன் அப்படின்னா, காரணத்தைச் சொல்கிறேன். எட்டு கோடி மக்களின் பிரதிநிதியாக இருக்கக்கூடிய முதலமைச்சர் விஜய் அவைக்குள் வரும்போது, அமர்ந்திருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் அந்தக் கண்ணியத்தைச் சொல்லிக் கொடுத்து, எட்டு கோடி மக்களின் முதலமைச்சருக்கு அந்த மரியாதையைத் தர வேண்டும் என்ற கண்ணியத்தைச் சொல்லித்தர வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். அதற்கு முன்னாள் அமைச்சர் நேரு, “எங்கள் திருச்சி மாவட்டத்தில் வெற்றி பெற்ற அமைச்சராக, அமைச்சர் அதை எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றிச் சொல்கிறார். ஐந்து ஆண்டுக் காலம் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, அவர் வருகிறபோது, எதிர்க்கட்சியில் இருக்கிற தலைவர் எழுந்ததில்லை. எனவே, அது ஒரு குறை இல்லை. அவரவருடைய எண்ணம், அவருடைய நடைமுறை, அதுதானே தவிர. அதைச் சொல்லும்போது அவர் சொன்னது வரைக்கும் நாங்கள் அதில் ஒன்றும் குறை சொல்லவில்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்றெல்லாம் அவர் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதுதான் விஷயம்” எனத் தெரிவித்தார்.

நான்கு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று (ஆகஸ்ட் 17, 2026) கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவையில், அமைச்சர் ரமேஷ் உரையாற்றினார். முன்னதாக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் பேசிய கருத்துகளுக்கு பதிலளித்த அமைச்சர், அவையின் கண்ணியம் குறித்து அவர் கூறியதை ஏற்றுக்கொள்வதாகவும், புதிய உறுப்பினர்களாகிய நாங்கள் அதைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதே சமயம், பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளைச் சுட்டிக்காட்டி அமைச்சர் பேசிய விவகாரம் அவையில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கு அமைச்சர் கே.என். நேரு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.