" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்

" தகாத உறவு - எச்சரித்த மகன் "

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கருப்பனூர் MGR நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை அவருடைய மனைவி கஸ்தூரி ( வயது 53). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். மகன் சத்தியமூர்த்தி ( வயது 26 ) மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் மகள் திருமணமாகி தருமபுரி பகுதியில் வசித்து வருகிறார்

மேலும் , கஸ்தூரியின் கணவர் அண்ணாதுரை கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் கஸ்தூரி குடும்பத்தை காப்பாற்ற பூ வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். மேலும் கஸ்தூரியின் மகன் சத்திய மூர்த்தி சென்னையில் பானிபூரி கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் , கஸ்தூரிக்கும் வேறொரு நபருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்த உறவு குறித்து கஸ்தூரியின் மகனுக்கு தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தாயார் கஸ்தூரியை சத்தியமூர்த்தி பலமுறை அவரது மகன் கண்டித்ததாக கூறப்படுகிறது.

கஞ்சா போதையில் தாக்குதல்

அதனை கண்டு கொள்ளாத கஸ்தூரி மீண்டும் அந்த நபருடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சென்னையிலிருந்து வந்த கஸ்தூரியின் மகன் சத்திய மூர்த்தி ஆத்திரமடைந்து கஞ்சா போதையில் கஸ்தூரியை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். மகன் தாக்கியதில் கஸ்தூரி படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு டி எஸ் பி முரளி தலைமையிலான போலீசார் விரைந்து வந்துள்ளனர். அப்போது தாய் கஸ்தூரியை கட்டையால் தாக்கி கொலை செய்து விட்டு அவரது மகன் சத்திய மூர்த்தி தப்பி செல்லாமல் வீட்டின் அருகே அமர்ந்துள்ளார்.

பின்னர், அவரை கைது செய்த ஜோலார்பேட்டை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தகாத உறவில் பெற்ற தாயை மகனே கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள கருப்பனூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் கஸ்தூரி. இவரது கணவர் அண்ணாதுரை 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில், கஸ்தூரிக்கு 26 வயதான சத்தியமூர்த்தி என்ற மகனும், திருமணமாகி தர்மபுரியில் வசிக்கும் ஒரு மகளும் உள்ளனர்.
கஸ்தூரியின் கள்ளக்காதல் உறவை அவரது மகன் சத்தியமூர்த்தி கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில், கஞ்சா போதையில் இருந்த சத்தியமூர்த்தி, தனது தாயின் கள்ளக்காதலை கைவிடாத ஆத்திரத்தில் அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார்.