கரூர் வழக்கு.. “வேலை கொடுப்பதை எதிர்க்க நீங்கள் யார்?”.. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!!
Karur govt jobs case: கரூரில் நடைபெற்ற நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது அரசின் கொள்கை முடிவு எனக் கூறித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

கரூரில் நடைபெற்ற நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. இந்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்த நிலையில், அந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இது அரசின் கொள்கை முடிவு என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளனர்.