PulseNews
அரசியல்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க எந்த எல்லைக்கும் செல்ல தயார்: ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஜான்குமார் பேசும்போது, புதுச்சேரிக்கு போதிய வருவாய் இல்லாததால் சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்க ட்சித் தலைவர் நாஜிம் மற்றும் நேயம் மக்கள் கழக எம்.எல்.ஏ. நேரு ஆகியோர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர். மாநில அந்தஸ்தில் ஒருமித்த கருத்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தான் வேண்டும். இந்தக் கோரிக்கையில் அனைத்து தரப்பினரும் ஒருமித்த கருத்துடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடு இருந்தால் மாநில அந்தஸ்து கோரிக்கை பலவீனமடையும் என அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், “இந்த சபையின் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் சபையை ஒத்திவைக்க வேண்டும்” என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். “எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யுங்கள்” இதற்கு பதிலளித்த சபாநாயகர், “சபையை ஏன் ஒத்திவைக்க வேண்டும்? மக்களுக்காக நீங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள்” என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட ஜான்குமார் எம்.எல்.ஏ., “நான் எனது பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்” என கூறினார். அவருக்கு ஆதரவாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களும் தாங்களும் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர். “எந்த எல்லைக்கும் செல்லத் தயார்” இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி குறுக்கிட்டுப் பேசினார். அப்போது அவர், "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்றால் எனது பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன். மாநில அந்தஸ்து எவ்வளவு முக்கியம், எவ்வளவு அவசியம் என்பது எனக்கு தெரியும். இதற்காக எந்த எல்லைக்கும் செல்ல வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உரிய அதிகாரம் இருந்தால்தான் மக்கள் நலத்திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியும். புதுச்சேரி வளர்ச்சி பெறுவதற்கு மாநில அந்தஸ்து மிகவும் அவசியம். பிரதமர் புதுச்சேரிக்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது, அவரிடமே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படாதது குறித்து எனது வருத்தத்தை தெரிவித்துள்ளேன். புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மாநில அந்தஸ்து தேவை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது” என்றார். இதனால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக சட்டசபையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே பரபரப்பான விவாதம் நடைபெற்றது. செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க எந்த எல்லைக்கும் செல்ல தயார்: ரங்கசாமி பேச்சு
PulseNews சுருக்கம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஜான்குமார் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, மாநில அந்தஸ்து விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் மற்றும் நேயம் மக்கள் கழக எம்.எல்.ஏ. நேரு ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

இந்த விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார் எனத் தெரிவித்தார். மாநில அந்தஸ்து கோரிக்கையில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் இருக்க வேண்டும் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics