ஜார்க்கண்ட் பேரவை வளாகம் அருகே மாணவர் பேரணியில் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகள் வீச்சு
அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி இன்று ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள், தடுப்புகளை உடைத்துக் கொண்டு செல்ல முயன்றபோது, அவர்கள் மீது காவல் துறை தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் மூலமும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கட்டுப்படுத்தியது.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை வளாகத்திற்கு அருகே அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரணியாகச் சென்ற மாணவர்கள் காவல்துறையின் தடுப்புகளை உடைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை தடியடி நடத்தியது. மேலும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனங்களைப் பயன்படுத்தியும் காவல்துறையினர் மாணவர்களைக் கலைத்தனர்.