PulseNews
அரசியல்

விவசாயி குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர் விஜய்..!

சேலம் சின்னக்காவூர் பகுதியில் விவசாயி ஒருவரின் வீட்டிற்கு திடீரென சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர் விஜய், மூதாட்டிக்கு தனது கண் கண்ணாடியை மாட்டி விட்டு மகிழ்வித்தார். முதலமைச்சரின் கன்னங்களை கைகளால் தழுவி திருஷ்டி கழித்த மூதாட்டி அவரை உணர்ச்சிப்பெருக்குடன் வரவேற்றார். மூதாட்டி உள்ளிட்ட அங்கிருந்த விவசாயி குடும்பத்திற்கு முதலமைச்சர் விஜய் பட்டுப் புடவைகள் மற்றும் பட்டு வேட்டிகளை வழங்கினார். இதை அடுத்து விமான நிலையம் செல்லும் வழியில், சாலை ஓரம் நின்று கொண்டிருந்த மூதாட்டிகளையும் முதலமைச்சர் விஜய் சந்தித்தார். மூதாட்டியின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு நலம் விசாரித்துப் பேசினார்.

Polimer News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
விவசாயி குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலமைச்சர் விஜய்..!
PulseNews சுருக்கம்

சேலம் சின்னக்காவூர் பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் திடீரென வருகை தந்து அந்த குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். அங்கு இருந்த மூதாட்டிக்கு தனது கண் கண்ணாடியை அணிவித்து மகிழ்வித்த அவர், அந்த குடும்பத்தினருக்கு பட்டுப் புடவை மற்றும் பட்டு வேட்டிகளை வழங்கினார்.

முதலமைச்சரின் கன்னங்களைத் தழுவி திருஷ்டி கழித்த அந்த மூதாட்டி, நெகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த மூதாட்டிகளையும் அவர் சந்தித்து நலம் விசாரித்தார்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics