சட்டமன்ற மரபை உடைத்த முதல்வர் விஜய்.. அமைச்சர்கள் வரிசையில் திடீரென அமர்ந்து அதிரடி!!
Historic Moment in TN Assembly: தமிழ்நாடு சட்டமன்றத்தில் வழக்கமாகப் பின்பற்றப்படும் நீண்டகால மரபை உடைத்து, முதல்வர் விஜய் தனது பிரத்யேக இருக்கையிலிருந்து விலகி அமைச்சர்களுக்கான வரிசையில் அமர்ந்து உரையாடிய நிகழ்வு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு இடையே அமர்ந்து அவர் ஆலோசனை நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபை மாற்றி, முதல்வர் விஜய் தனது வழக்கமான இருக்கையைத் தவிர்த்து அமைச்சர்களுக்கான வரிசையில் அமர்ந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நிகழ்வு குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
சட்டமன்ற அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு இடையே அமர்ந்த முதல்வர் விஜய், அவர்களுடன் கலந்துரையாடி ஆலோசனை நடத்தினார். சட்டமன்ற மரபுகளை உடைத்து அவர் மேற்கொண்ட இந்தச் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.