''அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாராக இருந்தாலும் கள் தடை நியாயமானது என நிரூபித்தால் இனோவா காரை பரிசு''; விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு..!
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாராக இருந்தாலும் கள் தடை நியாயமானது என நிரூபித்தால் இனோவா காரை பரிசு தருவதாக தெரிவித்துள்ளார். அத்துடன், கர்நாடகாவில் குறுவை சாகுபடி சாத்தியமாகும்போது ஏன் தமிழகத்தில் சாத்தியமாகவில்லை என்று கேள்வி எழுப்பியதோடு, இது குறித்து எந்த இடது சாரியோ, வலது சாரியோ அல்லது தேசிய கட்சிகளோ வாய்த்திறக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதுவரை யாரும் காவிரி நீர் பிரச்சினை குறித்து குரல் எழுப்பவில்லை என்றும், அதற்கு மாறாக பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. காவிரி பிரச்சினையில் தமிழகம், கர்நாடகா மாநில அரசுகளும் தவறு செய்து வருகின்றன. காவிரித் தீர்ப்பை கர்நாடகா அரசு காலில் போட்டு மிதித்து உள்ளது என்று விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில்கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி ஏராளமான போராட்டங்கள் நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை என்றும், கள் தடை நியாயமானது என அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ யார் நிருபித்தாலும் அவர்களுக்கு இனோவா காரை பரிசாக கொடுக்க தயாராக உள்ளோம் என்றும் சவால் விடுத்துள்ளார். மேலும், வரக்கூடிய இடைத்தேர்தலில் பெருந்துறை தொகுதியில் காவிரி உரிமை மீட்பு, கள் விடுதலை அமைப்பு சார்பில் ஒருவரை வேட்பாளராக களமிறக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழக அரசு மதுக் கொள்கையை மாற்றியமைக்க வேண் டும் என்றும், இலவச மானியம், கடன் தள்ளுபடி, காப்பீடு நிவாரணம், வருமான வரி விலக்கு போன்ற சலுகைகளை நாங்கள் கேட்க வில்லை. எங்களுக்கு தேவை சுயமரியாதை என்று தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறதாகவும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி, கள் மீதான தடை நியாயமானது என்பதை அமைச்சர்களோ அல்லது எம்எல்ஏக்களோ நிரூபித்துக் காட்டினால் அவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் குறுவை சாகுபடி செய்ய சாத்தியமான நிலையில் தமிழகத்தில் ஏன் அது சாத்தியப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், இந்த விவகாரம் குறித்து எந்தவொரு தேசிய கட்சியோ அல்லது இடது, வலது சாரி அமைப்புகளோ குரல் எழுப்பவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.