PulseNews
அரசியல்

புதுச்சேரியில் ரங்கசாமியை மிரட்டி காரியம் சாதிக்கும் பா.ஜ.க; நாராயணசாமி கடும் தாக்கு

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழாவில் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில அந்தஸ்து கேட்க தெம்பில்லாத முதல்வர் ரங்கசாமியை மிரட்டி பாஜக தனது அரசியலை நடத்தி வருவதாகக் கடுமையாகக் குற்றம்சாட்டினார். புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழாவில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: முதல்வர்கள் மாநாட்டில் ஆளுநர் பங்கேற்க அனுமதி புதுச்சேரியில் கடந்த 3 மாத காலமாக எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அமைச்சர்கள் பதவியேற்க 2 மாதங்களும், இலாகா ஒதுக்கீடு செய்ய 3 மாதங்களும் ஆகிவிட்டன. தற்காலிக சபாநாயகர் சபையை நடத்தப் போகிறார் என்று சொல்வதன் உள்நோக்கம் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். நான் முதல்வராக இருந்தபோது, அப்போதைய ஆளுநர் கிரண்பேடி, முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறைக்குக் கடிதம் அனுப்பினார். அதற்கு நான் தெரிவித்த எதிர்ப்பையும் மீறி, கிரண்பேடியை தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார். நான் தென்மாநிலக் கூட்டங்களில் புதுச்சேரி மாநிலப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசினேன்; ஆனால் கிரண்பேடி சுற்றுப்புறச் சூழல் பற்றிப் பேசினார். ஆளுநர்கள் மாநிலப் பிரச்சனைகளைப் பற்றிப் பேச மாட்டார்கள்; மாநிலப் பிரச்சனைகளைப் பற்றி அவர்களுக்கு அக்கறையும் இல்லை. அதிகாரத்தை தர மறுக்கும் ரங்கசாமியை மிரட்டும் பா.ஜ.க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தான் மாநிலப் பிரச்சனைகளைப் பற்றிப் பேச வேண்டும். ஆனால், அதிகாரமில்லை என்று ரங்கசாமி புலம்புகிறார். நாடாளுமன்றத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்பதற்கு, ரங்கசாமி ஏன் முதல்வர்கள் மாநாட்டிற்குச் செல்லவில்லை? மாநில அந்தஸ்திற்காகப் பெரிய போராட்டத்தை நடத்த வேண்டி வரும். அதற்கான தெம்பு, திராணி ரங்கசாமிக்குக் கிடையாது. அவர் எல்லாவற்றையும் தன் கையிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்; யாருக்கும் எந்த அதிகாரத்தையும் பகிர்ந்துகொடுக்க முடியாது என்று சொல்பவர். ஆனால், அவரை மிரட்டி பா.ஜ.க தன் காரியத்தைச் சாதித்துக் கொள்கிறது. அமைச்சர்களுக்கு எந்தெந்தத் துறைகளைக் கொடுக்க வேண்டும் என்ற அதிகாரம் முதல்வருக்குத்தான் உள்ளது. தன்னுடைய அதிகாரத்தைப் பறிக்கும் கட்சியுடன் கூட்ணியாக இருப்பதற்கான காரணம் என்ன? கடந்த 5 ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை, ஊழல் தான் நடந்தது. அதே நிலைதான் இப்போதும் தொடரப் போகிறது. அடுத்த கூட்டத்தில் காங்கிரஸ் தோல்விக்கான காரணம் இலவச அரிசி போடுவதில் ஊழல் நடப்பதால், பணமாகப் போடவுள்ளனர். இந்த ஆட்சியில் பாதிக்கப்படப் போவது மக்கள்தான். பா.ஜ.க-வுக்கு புதுச்சேரி மீது அக்கறை கிடையாது. அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு ஆட்சி செய்ய வேண்டும்; தென்மாநிலங்களிலும் எங்களுக்கு ஒரு ஆட்சி இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்பதுதான் பா.ஜ.க-வின் கொள்கை. முதல்வர் ரங்கசாமிக்கு முதல்வர் நாற்காலியைத் தவிர வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியாது. இதற்கு முடிவு கட்டக் கடந்த ஆட்சியில் போராட்டம், நடைபயணம், பேரணி என அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தோம். மக்களும் நமக்கு வாக்களிக்கத் தயாராக இருந்தார்கள். இருப்பினும், நாம் எதற்காகத் தோல்வியுற்றோம் என்பதை இன்னொரு கூட்டத்தில் விளக்கமாகக் கூறுகிறேன். நம்முடைய தோல்விக்கு எல்லோரும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.” என்று நாராயணசாமி பேசினார். செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
புதுச்சேரியில் ரங்கசாமியை மிரட்டி காரியம் சாதிக்கும் பா.ஜ.க; நாராயணசாமி கடும் தாக்கு
PulseNews சுருக்கம்

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழாவில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது, மாநில அந்தஸ்து பெறுவதற்குத் துணிச்சல் இல்லாத முதல்வர் ரங்கசாமியை, பாஜக மிரட்டி அதன் அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதாக அவர் கடுமையாகச் சாடினார்.

புதுச்சேரியில் கடந்த மூன்று மாதங்களாக எந்தவிதமான திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். முதல்வர்கள் மாநாட்டில் துணைநிலை ஆளுநர் பங்கேற்க அனுமதி வழங்கியது குறித்தும் அவர் தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics