அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கான எதிர்ப்பு மனு : நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு அவரது சட்டத்தரணி இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவி...

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை செல்லுபடியற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனுவை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு இராமநாதன் அர்ச்சுனாவின் தரப்பு சட்டத்தரணி இன்றைய விசாரணையின் போது நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.