PulseNews
அரசியல்

நாளைய பிரதமரே.. கொம்பு சீவும் அமைச்சர்கள்... கடிவாளம் போடுவாரா முதலமைச்சர் விஜய்?

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய், எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமராவார் என அமைச்சர்கள் புகழ் பாடுவது தவெகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தவெகவினரின் அரசியல் எழுச்சி

தமிழக வெற்றிக் கழகம் கட்சியானது முதலமைச்சர் விஜயால் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. 2 ஆண்டுகள் 3 மாதம் மட்டுமே நிறைவடைந்த 2026 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி பெருவாரியான வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. தவெக ஆட்சியைப் பிடிக்கும் என தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் இந்தியாவில் செயல்படும் தேசிய கட்சிகள் கூட எதிர்பார்க்கவில்லை. இதனால் முதலமைச்சர் விஜய் பற்றிய பேச்சு பல வட மாநிலங்களிலும் பரவலாக இருப்பதை வீடியோக்கள் வழியாக காண முடிகிறது.

நாளைய பிரதமரே நீங்கள் தான்

இந்த நிலையில் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று 100 நாட்கள் தான் கடந்துள்ளது. இன்னும் நான்கே முக்கால் ஆண்டுகால ஆட்சி மீதமுள்ள நிலையில் அடுத்த பிரதமர் நீங்கள் தான் என தவெகவில் இருக்கும் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பேசிவருவது தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தின்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, எதிர்க்காலத்தில் தென்னிந்தியாவில் இருந்தோ, தமிழ்நாட்டில் இருந்தோ ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் குரல் நாடாளுமன்றத்தில் பிரதமர் இடத்தில் இருந்து ஒலிக்க வேண்டும் என விஜய் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்தார்.

இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் சரத்குமார் பேசும்போது, எங்கள் இதயத்திலும், இல்லத்திலும், கோட்டையிலும் முதலமைச்சராக இருக்கும் எங்கள் தலைவா நாளைய பாரதத்தின் பிரதமர் நீங்கள் தான். AM - PM பார்க்காமல் உழைக்கும் எங்கள் CM தான் நாளைய PM என அடுக்குமொழியில் அடுக்கினார்.

கடிவாளம் போடுவாரா முதலமைச்சர்?

இந்த நிலையில் விஜய்க்கு பிரதமராகும் அளவுக்கு தகுதி இல்லை என யாரும் சொல்லவில்லை. மாறாக முதலமைச்சராக 5 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டால் அடுத்தடுத்தக் கட்டத்துக்கு அவரை மக்களே அழைத்து செல்வார்கள். அதனை விடுத்து இப்படி புகழ்பாடி அதிமுக, திமுகவைப் போல தவெகவை மாற்றி விட வேண்டாம் என சமூக வலைத்தளங்களில் கோரிக்கை எழுந்துள்ளது. மக்கள் தவெக அரசை முழுமையாக நம்புகின்றனர். மாற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

அப்படியிருக்கும்போது தலைக்கு மேல் மக்கள் பிரச்னை நிரம்பி வழியும் நிலையில் சட்டசபையிலோ, பொது வெளியிலோ புகழ் பாடுவதை குறைத்து பிரச்னைகளும், அதற்கான தீர்வுகள் பற்றி பேசுங்கள் என சாமானிய மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர். முதலமைச்சர் விஜயும் இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்காமல் கடிவாளம் போட வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நாளைய பிரதமரே.. கொம்பு சீவும் அமைச்சர்கள்... கடிவாளம் போடுவாரா முதலமைச்சர் விஜய்?
PulseNews சுருக்கம்

தமிழக முதல்வர் விஜய் எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமராக வருவார் என அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருவது, தமிழக வெற்றிக் கழகத்தினர் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் தலையிட்டு அமைச்சர்களின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம், இரண்டே ஆண்டுகளில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சியின் அரசியல் எழுச்சி தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ள நிலையில், அமைச்சர்களின் இத்தகைய புகழ்ச்சி கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics