“கடந்த 75 ஆண்டுகளில் தலித் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை” - அமைச்சர் பேச்சு!
சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இன்று (27.08.2026) பேசுகையில், “சட்டமன்ற உறுப்பினர் (திமுக), ‘நாங்கள்தான் தலித் சகோதரர்களுக்கு அனைத்தையும் செய்தோம்’ என்று கூறுகிறார். இஸ்லாமிய சகோதரர்கள் குறித்த ஒரு படத்தின் கான்செப்ட் என்பது ஒவ்வொருவருடைய பார்வையில் இருக்கிறது. அப்போது 1999-2004-ல் கலைஞர் என்ன பேசினார் என்பதை நாங்களும் இப்போது எடுத்துப் பேச முடியும். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சமூக இயக்கம் என்று சொன்னது இதே அவையில்தான். அதையும் நாங்கள் சொல்ல முடியும். இது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் என்பதை நான் திருப்பிப் பதிவு செய்கிறேன். இதோடு நான்கு முறை அரசைக் குறை சொல்லிப் பேசிக்கொண்டு இருக்கிறார். நாங்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டு இருக்கிறோம். யாருடைய பேச்சிலும் நாங்கள் வந்து குறுக்கிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் குறைகளைச் சொல்ல வேண்டுமென்றால், நாங்களும் 50 வருட வரலாற்றை எடுப்போம். 1999-2004இல் கோத்ரா கலவரம் நடக்கும் பொழுது என்ன குரல் கொடுத்தீர்கள்?. இஸ்லாமியர்கள் பாதிக்கப்படும் பொழுது அமைச்சரவையில் இருந்தது யார்? இதே தி.மு.க.தான். அமைச்சராக இருந்து என்ன? அப்போது குரல் கொடுத்திருக்கலாமே. கோத்ரா கலவரத்தில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள். அதனால் நாங்கள் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்கிறோம்; எங்களுக்கு பதவி முக்கியமல்ல, இஸ்லாமியர்களுடைய உயிர்தான் முக்கியம் என்று பதவியில் இருந்து விலகி இருக்கலாமே. தி.மு.க. விலகி இருக்கலாமே? 1999 முதல் 2004 வரைக்கும் பா.ஜ.க.வோடு ஆட்சி ஐந்து வருடம் முழுமையாகக் கொண்டு வந்தது தி.மு.க. இந்தப் பாவத்தையும், இந்த வரலாற்றையும் எப்போதும் மறைக்க முடியாது. அதனால் குறைகள் சொல்லாதீங்க. நாங்களும் வரலாறு தெரிந்தவர்கள்தான். அப்புறம் தலித் சகோதரர்கள் பற்றி சொல்லும்போது சொல்கிறார். போன கவர்மெண்டில் தமிழ்நாடு ரெக்கார்ட் 67 சதவீதம் உயர்வு.. அதாவது 2019 முதல் 2023 வரை அதிகரிப்பு சதவீதம் இந்தியாவிலேயே அதிகம் என்று நேஷனல் கமிஷன் ஆஃப் தலித் ஹியூமன் ரைட்ஸ் கமிஷன் ரிப்போர்ட் சொல்கிறது. இதை நாங்கள் சொல்லவில்லை. என்.சி.டி.ஆர். சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் அதிகமான தலித் மக்களுக்கு எதிரான குற்றம் நடந்தது உங்களுடைய ஆட்சியில்தான் என்று டேட்டா சொல்லுது. இதை நாங்கள் இங்கே பதிவு செய்கிறோம். அதனால் குறைகள் சொல்லாதீங்க. தலித் மக்களுக்கான ஒதுக்கிய நிதி தி.மு.க. ஆட்சியில் நிதி பயன்பாட்டுக் குறைபாடுகள் இருந்ததாக சி.ஏ.ஜி. ஆடிட் அண்ட் டேட்டாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசினுடைய டேட்டா, அதனுடைய ஆடிட்டில், ஆதிதிராவிடர் நலன் தொடர்பான பல கல்வி மற்றும் ஸ்காலர்ஷிப் திட்டங்களில் தொடர்ச்சியான சேவிங்ஸ் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2021-22-ல் மட்டும் எஸ்.சி., எஸ்.டி. கேர்ள்ஸ் லிட்ரசி இன்சென்டிவ் ரூ.6.67 கோடி சேவிங்ஸ், அப்ராட் ஸ்காலர்ஷிப் ஃபார் எஸ்.சி., எஸ்.டி. ஸ்டூடன்ட்ஸ் ரூ.5.31 கோடி சேவிங்ஸ், ஹையர் எஜுகேஷன் ஸ்பெஷல் ஸ்காலர்ஷிப் ரூ.5.58 கோடி சேவிங்ஸ், அப்புறம் எஸ்.சி., எஸ்.டி. ஸ்டூடன்ட்ஸ் எஜுகேஷனல் அசிஸ்டன்ஸ் ரூ.7.24 கோடி சேவிங்ஸ் போன்ற தொகைகள் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகப் பயனாளிகளிடம் சென்றதா? அதாவது நிதியை ஒதுக்கிவிட்டு, எந்த ஃபண்ட்டும் தலித் மக்களுக்குப் போய்ச் சேரவில்லை. இது வந்து நாங்கள் சொல்லவில்லை. இதை சி.ஏ.ஜி.யுடைய ரிப்போர்ட் சொல்கிறது. அதனால் உங்களுடைய பாலிசியைப் பற்றிச் சொல்லுங்கள். அரசின் 100 நாள்தான் நாங்கள் வந்திருக்கிறோம். ஒருவர் சொன்னார், சமூக நீதி துறை என்று மாற்றிவிட்டார்கள். சாதியைக் குறிப்பிட்டால் வந்து போய்விடுமா?. இந்த அரசு, 'சாதி' என்கிற வார்த்தையை முதலில் ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அதனால்தான் பெயரை மாற்றம் செய்தோம். வேறு எதுவும் கிடையாது. நீங்க 'காலனி' என்ற வார்த்தையை ஒழித்தீங்க. காலனி ஒழிஞ்சிருச்சா? 25-லிருந்து 28 சதவீதம் இந்த 75 வருஷத்தில் இன்னும் விழுப்புரத்திலும், கள்ளக்குறிச்சியிலும், தமிழகம் முழுவதும் இன்னைக்கும் காலனியில் தலித் மக்கள் அதே குடிசையில்தான் இருக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரம் பண்ணும்போது சாதாரண குடிசையில அந்த இடத்துல தண்ணி இல்ல, ரோடு இல்ல, மெடிக்கல் இல்ல. அங்கே இருக்கக்கூடிய பெண்கள் ஹையர் எஜுகேஷன் போகிறார்களா? இப்ப சர்வே எடுத்து சொல்ல முடியும். அதிகமான பெண் கல்வியில் முக்கியத்துவம் கொடுத்திருக்கோம். ஆனால் தலித் பெண்களுக்கான முக்கியத்துவம் கடந்த 75 வருஷத்தில் கொடுக்கப்படவில்லை. இந்த டேட்டாதான் உண்மை. நீங்க என்ன வேணாலும் பதில் சொல்லுங்க. ஜனநாயகப் பூர்வமாக அர்த்தமுள்ள விவாதம் பண்ணுவோம். அவர் சொன்ன குறை குறித்து பேசி முடிப்போம்.... இந்த சவுண்டெல்லாம் விட வேண்டாம்.” எனத் தெரிவித்தார்.

கடந்த 75 ஆண்டுகளில் தலித் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சட்டமன்றத்தில் தெரிவித்தார். திமுக சட்டமன்ற உறுப்பினர் தலித் சகோதரர்களுக்குத் தாங்களே அனைத்தையும் செய்ததாகக் கூறுவது குறித்து அவர் விமர்சித்தார்.
இஸ்லாமியர்கள் குறித்த திரைப்படக் கருத்துகள் ஒவ்வொருவரின் பார்வையையும் சார்ந்தது என்று குறிப்பிட்ட அவர், கடந்த காலத்தில் கலைஞர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சமூக இயக்கம் என்று குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது அவர் இந்த கருத்துகளைப் பதிவு செய்தார்.