தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC தான்! - சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி ஆவேசம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நடைபெற்ற சிறப்பு கவனயீர்ப்பு விவாதத்தின் போது, என்.எல்.சி (NLC) இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடி பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி உரையாற்றினார். அப்போது தமிழ்நாட்டிலே மனசாட்சி இல்லாத நிறுவனம் ஒன்று இருக்கிறது என்றால் அது என்எல்சி நிறுவனம் தான் என்றும் நிலம் கொடுத்த உள்ளூர் மண்ணின் மைந்தர்களுக்கு வேலை கொடுக்காமல் நீட் தேர்வு போல நுழைவுத் தேர்வு வைத்து வெளி மாநில ஆட்களை என்எல்சி நிறுவனம் தேர்வு செய்து வருகிறது என சட்டப்பேரவையில் கொந்தளித்த சௌமியா அன்புமணி.

சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கவனயீர்ப்பின் மீது பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி:

தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாமல் இயங்கும் நிறுவனம் என்றால் அது என்எல்சி நிறுவனம் தான் ஒரே இரவில் விவசாயிகளை தூக்கி போட்டுவிட்டு நிலங்களை கையகப்படுத்திக் கொண்டார்கள். நிலத்தடி நீரை உறிஞ்சு நிலத்தையும் பாழ்படுத்தி விட்டார்கள்.

நிலத்தை எடுத்துக் கொண்டு அந்த மண்ணின் பூர்வீக மக்களுக்கு வேலை கொடுக்காமல் தற்போது தேர்வு வைத்து வெளி மாநில ஆட்களை தேர்வு செய்கிறார்கள். நீங்கள் என்ன மருத்துவ படிப்பிற்கு ஆள் எடுக்கிறீர்கள் என்ட்ரன்ஸ் எக்ஸாம் எல்லாம் வைக்கிறீர்களே என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

என்எல்சி நிறுவனம் எப்போதும் தவறான தகவல்களை மட்டும் தான் கொடுப்பார்கள் சி எஸ் ஆர் நிதியை கூட அவர்கள் முழுமையாக மக்களுக்கு பயன்படுத்துவதில்லை சாலை போட்டோம், மேம்பாலம் கட்டினோம் என்று சொல்வார்கள் ஆனால் அவர்களது வளாகத்திற்குள்ளேயே போட்டுக் கொள்வார்கள் பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் எதுவும் செய்திருக்க மாட்டார்கள்.

அதற்கு பதில் அளித்து பேசிய தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, எனர்ஜி நிறுவனத்தைப் பற்றி அதிகமான புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றது. தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரையில் விவசாயிகள் பக்கம் தான் இருக்கும். இந்த அரசு அமைந்து மூன்று மாதம்தான் ஆகிறது நாங்கள் நீங்கள் கேட்டது போல கமிட்டி அமைத்து இருக்கிறோம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது நிச்சயமாக நாங்கள் விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் எதிராக நடந்து கொள்ள மாட்டோம் என விளக்கம் கொடுத்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற சிறப்பு கவனயீர்ப்பு விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, என்.எல்.சி (NLC) நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார். தமிழ்நாட்டிலேயே மனசாட்சி இல்லாத நிறுவனம் எதுவென்றால் அது என்.எல்.சி தான் என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
நிலம் கொடுத்த உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்காமல், நீட் தேர்வு போன்று நுழைவுத் தேர்வு நடத்தி வெளி மாநிலத்தவர்களை அந்நிறுவனம் பணியமர்த்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.