ஏர்போர்ட் போனதும் அதிர்ச்சி ஆகாதீங்க... அமெரிக்காவில் இந்தியர்களை குழப்பும் விசித்திர விதிகள்
அமெரிக்காவிற்கு முதல்முறையாகப் பயணிக்கும் இந்தியர்கள் அங்குள்ள வாழ்க்கை முறை மற்றும் சட்டதிட்டங்களை முன்னரே புரிந்துகொள்வது அவர்களின் பயணத்தை சுமுகமாக்கும். இந்திய முறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சில முக்கிய நடைமுறைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். அமெரிக்காவில் அதானிக்கு பெரிய வெற்றி... குற்றவியல் வழக்கு அதிரடி தள்ளுபடி; 10 பில்லியன் டாலர் முதலீடு தான் காரணமா? விசா மற்றும் குடியுரிமைத் தணிக்கை பி1, பி2, ஹெச் -1பி அல்லது எஃப் 1 (B1/B2, H-1B அல்லது F-1) போன்ற பொருத்தமான விசாவைப் பெறுவதுடன், குறைந்தபட்சம் 6 மாதம் செல்லுபடியாகும் கால அளவு கொண்ட பாஸ்போர்ட்டை கைவசம் வைத்திருக்க வேண்டும். விமான நிலையத்தில் குடியுரிமைச் சோதனை அதிகாரிகளின் கேள்விகளுக்குத் தெளிவான பதிலளிப்பதும், பயண நோக்கம், தங்குமிடம் மற்றும் திரும்பும் பயணச் சீட்டு ஆகிய ஆவணங்களைத் தயார் நிலையில் வைத்திருப்பதும் அவசியமாகும். மருத்துவக் காப்பீடு மற்றும் பொருளாதாரத் திட்டமிடல் அமெரிக்காவில் மருத்துவச் சிகிச்சை முறைகள் மிகவும் விலையுயர்ந்தவை என்பதால், 50,000 டாலர் முதல் 100,000 டாலர் வரையிலான இழப்பீடு வழங்கும் பயண அல்லது சுகாதாரக் காப்பீட்டை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது. தங்குமிடம், உணவு மற்றும் உள்ளூர் போக்குவரத்துச் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால், டாலர் மதிப்பிற்கு ஏற்ப நிதித் திட்டமிடலை முன்கூட்டியே மேற்கொள்வது நல்லது. டிப்ஸ் மற்றும் விற்பனை வரி நடைமுறைகள் உணவகங்கள், வாடகை வாகனங்கள் மற்றும் சேவைத் துறைகளில் வரிக்கு முந்தைய பில் தொகையில் 15% முதல் 20% வரை 'டிப்ஸ்' வழங்குவது அங்குள்ள வழக்கமான நடைமுறையாகும். பொருட்களின் விலை ப்ரைஸ் டேக்கில் உள்ள தொகையுடன், பில்லிங் செய்யும்போது அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப 0% முதல் 10% வரை விற்பனை வரி கூடுதலாகச் சேர்க்கப்படும். போக்குவரத்து மற்றும் சாலை விதிகள் நியூயார்க், சிகாகோ போன்ற பெரிய நகரங்களைத் தவிர பிற இடங்களில் பொதுப் போக்குவரத்து குறைவு என்பதால் டாக்ஸி செயலிகள் அல்லது சொந்த வாகனங்களையே அதிகம் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். அமெரிக்காவில் வலதுபுறமாக வாகனங்களை இயக்கும் முறை பின்பற்றப்படுகிறது. வாகனம் ஓட்டுவதற்குச் சர்வதேச ஓட்டுநர் உரிமம் அவசியமாகும். பாதசாரிகளுக்கே சாலையில் முதல் முன்னுரிமை அளிக்கப்படும். 'ஜீப்ரா கிராசிங்' அல்லாத இடங்களில் சாலையைக் கடப்பது சில நகரங்களில் அபராதத்திற்கு உரிய குற்றமாகும். அளவீடுகள் மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் அமெரிக்காவில் இம்பீரியல் முறை பயன்படுத்தப்படுகிறது. தூரம் மைல்களிலும், எடை பவுண்டுகளிலும், வெப்பநிலை ஃபாரன்ஹீட்டிலும் கணக்கிடப்படுகின்றன. மின் சாதனங்களுக்கு டைப் ஏ,பி பிளக் பாயிண்ட்களும் (110V / 60Hz மின்சாரம்) பயன்படுத்தப்படுவதால், ஒரு சர்வதேசத் பயண அடாப்டரை (Universal Travel Adapter) உடன் எடுத்துச் செல்வது நல்லது. பணப்பரிவர்த்தனைகளுக்கு ரொக்கத்தை விடக் கிரெடிட், டெபிட் கார்டுகள் மற்றும் டிஜிட்டல் முறைகளே அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளன. சட்டங்கள் மற்றும் சமூக நெறிமுறைகள் ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் 911 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். மதுபானம் அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது 21 ஆகும். பூங்காக்கள், சாலைகள் போன்ற பொது இடங்களில் மது அருந்துவது சட்டப்படி குற்றமாகும். வரிசையில் காத்திருத்தல், தனிநபர் இடைவெளியை மதித்தல் மற்றும் அடிப்படை நாகரிக வார்த்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவை அங்குள்ள கலாச்சாரத்தின் முக்கிய அங்கங்களாகும்.

அமெரிக்காவிற்கு முதல்முறையாகப் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள், அந்நாட்டுச் சட்டதிட்டங்களையும் வாழ்க்கை முறைகளையும் முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவர்களின் பயணத்தை எளிதாக்கும். குறிப்பாக, பி1, பி2, ஹெச்-1பி மற்றும் எஃப்-1 போன்ற விசா நடைமுறைகள் மற்றும் விசா சார்ந்த விதிகளைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.
இந்திய நடைமுறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சில முக்கிய விதிகள் அங்கு பின்பற்றப்படுகின்றன. எனவே, விமான நிலையத்திற்குச் செல்லும் முன்பு அந்நாட்டு விசா மற்றும் குடியுரிமை தொடர்பான விதிகளை இந்தியர்கள் தெளிவாக அறிந்துகொள்வது பயணத்தில் குழப்பத்தைத் தவிர்க்க உதவும்.