PulseNews
அரசியல்

அதிமுக வேட்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு; விஜயபாஸ்கருக்கு எதிராக வழக்குப்பதிவு!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று 37வது நாளில் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் தவெகவில் இணைந்துள்ள மாஜி அதிமுக அமைச்சராகவும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளராகவும் இருந்த சி.விஜயபாஸ்கர் மீது ஆலங்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தன.விமல் சில தினங்களுக்கு முன்பு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது, சட்டமன்றத் தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி விஜயபாஸ்கர் ரூ.4 கோடி பணம், நிரப்பப்படாத காசோலை, ரூ.10 லட்சத்திற்கான சொத்து அடமானப் பத்திரம் வாங்கிக் கொண்டு மோசடி செய்துள்ளதாக ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட தன.விமல் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி க்கு தபால் மூலம் புகார் மனு அனுப்பினார். அந்த மனுவில், ‘முன்னாள் அமைச்சரான விஜயபாஸ்கர் 19.11.2025 அன்று, என்னை தொடர்பு கொண்டு சீட்டு கொடுத்தால் தொகுதிக்கு செலவு செய்ய தகுதி உள்ளவர் என்பதை நிரூபிக்க ரூ.5 கோடி பணம் வைப்புத் தொகையாக தன்னிடம் தறும்படி கேட்டார். அதன்படி அவர் ஒப்படைக்க சொன்ன புதுக்கோட்டையில் சோத்துப்பாளை முருகேசனிடம் ரூ.4.50 கோடி பணத்தை ஒப்படைத்தேன். ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக சீட்டு கிடைத்த மறுநாள் வைப்புத் தொகை ரூ.4.50 கோடி பணத்தை விஜயபாஸ்கரிடம் கேட்டேன். ரூ.50 லட்சம் மட்டும் கொடுத்தவர் மீதி பணம் ரூ.4 கோடியை தராமல் இழுத்தடித்தார். தேர்தல் வேலைக்கு பணம் இல்லை என்று சொன்ன பிறகு, புதுக்கோட்டை முத்துக்குமார் மகன் இளங்கோவிடம் ரூ.10 லட்சம் பணம் கடனாக கொடுக்கச் சொல்கிறேன், வீட்டை அடமானப் பத்திரம் எழுதிக் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். எனது தந்தை துரைதனசேகரன் பெயரில் உள்ள சொத்தை, இளங்கோ பெயருக்கு கடனுக்கு அடமானம் பத்திரம் பதிவு செய்து கொடுத்தேன். கூடவே எனது நிரப்பப்படாத காசோலை ஒன்றையும் பெற்றுக் கொண்டு பணத்தை எனது தம்பி கபில்துரையின் வங்கி கணக்கில் செலுத்துவதாக கூறிச் சென்றவர்கள் நில அடமான பணத்தையும் தரவில்லை. இது சம்மந்தமாக எனது பணத்தை திருப்பிக் கேட்டு நானும் விஜயபாஸ்கரை 16 முறை சந்தித்தும் போனிலும் கேட்டும் பணம் தராமல் மிரட்டல் விடுத்தார். ஆகவே என்னிடம் வாங்கிய பணத்தையும், நிரப்பப்படாத காசோலையையும் மீட்டுத்தருவதுடன் அடமானப் பத்திரத்தை ரத்து செய்யது தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த புகாரைத் தொடர்ந்து ஆலங்குடி அதிமுக வேட்பாளர் தன.விமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீது நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை விரைவில் வரவுள்ளது.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அதிமுக வேட்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு; விஜயபாஸ்கருக்கு எதிராக வழக்குப்பதிவு!
PulseNews சுருக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியின் அதிமுக வேட்பாளர் தன.விமல், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் சீட் பெற்றுத் தருவதாகக் கூறி, தன்னிடம் 4 கோடி ரூபாய் பணம் மற்றும் நிரப்பப்படாத காசோலைகளை விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனடிப்படையில், முன்னாள் அமைச்சரும், தற்போதைய தவெக உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் கட்சியில் இணைந்திருந்த நிலையில், இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics