PulseNews
அரசியல்

பள்ளிகளில் மத நிகழ்வுகள் தடை... அரசாணையில் சில பகுதிகளை ரத்து செய்யக் கோரி வழக்கு !

<p>பள்ளிகளில் மதம் தொடர்பான நிகழ்வுகளை நடத்த தடை விதித்த பள்ளிக்கல்வித்துறையின் அரசாணையில் சில பகுதிகளை ரத்து செய்யக் கோரிய வழக்கு.</p> <p><strong>தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு மதுரை அமர்வு உத்தரவு</strong></p> <p>மதுரை சேர்ந்த தாண்டீஸ்வரன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், " மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருவருள் முருகன் பக்த சபை அறக்கட்டளையால் வழங்கப்படும் விருந்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் சேதுபதி மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை 29ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அரசாணை பள்ளிகளில் மதம் தொடர்பான நிகழ்வுகளை நடத்த தடை விதித்துள்ளதால், திருக்கல்யாண விருந்தை மதுரை சேதுபதி பள்ளி மைதானத்தில் வழங்குவதில் சிரமம் எழுந்துள்ளது. எனவே, பள்ளிகளில் மதம் தொடர்பான நிகழ்வுகளை நடத்த தடை விதித்த பள்ளிக்கல்வித்துறையின் அரசாணையில் சில பகுதிகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்"என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு வழக்கு தொடர்பாக, தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.</p>

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பள்ளிகளில் மத நிகழ்வுகள் தடை... அரசாணையில் சில பகுதிகளை ரத்து செய்யக் கோரி வழக்கு !
PulseNews சுருக்கம்

பள்ளிகளில் மத நிகழ்வுகளை நடத்த தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அரசாணையின் சில பகுதிகளை ரத்து செய்யக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாண்டீஸ்வரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, திருவருள் முருகன் பக்த சபை அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட விருந்தின் போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த சூழலில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics