நயினார் நாகேந்திரன் பேச்சு அநாகரீகமானது... தி.மு.க - பா.ஜ.க உறவு வெளிச்சத்துக்கு வரும்; ராஜ்மோகன்
சென்னையில் மாநில பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாயத்தில் பேசிய தமிழ்நாடு மாநில பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரிகமாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. 'அப்பாவை காணோம்' என்ற முதலமைச்சர் விஜயின் பேச்சுக்கு எதிர்வினையாக அவர் அநாகரிகமாக பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. 10 கி.மீ ஆழத்தில் வெடித்த பூமி... 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; 38 உயிர்களை பறித்த பேரழிவு அமைச்சர்கள் உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் விஜய் குறித்த நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு, அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ”தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு அநாகரீகமானது. அவர் நாகரிகமாக பேச வேண்டும். தமிழக அரசியலில் மறைமுக நட்பெல்லாம் வெளிப்படும் நேரம் இது. விரைவில் தி.மு.க - பா.ஜ.க இடையேயான உறவு வெளிச்சத்துக்கு வரும் தி.மு.க-வினர் போல பா.ஜ.க-வினரும் அவதூறு பேசி வருகின்றனர். சத்தம் இன்றி சாதனைகளை நிகழ்த்தும் முதலமைச்சர் விஜய். மாற்றம் வேண்டும் என ரீல்ஸ் போட்டது மக்கள் தான். த.வெ.க-வினர் அல்ல. சத்தமில்லாமல் ஒவ்வொரு நாளும் சாதனை செய்து வருகிறார் முதலமைச்சர் விஜய். ஊழலை ஒழிப்போம் என்ற நம்பிக்கையை மக்களின் மனதில் அறுவடை செய்திருக்கிறோம்” என்றார். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறான மற்றும் இழிவாகப் பேசிய நயினார் நாகேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் வர்த்தினி காவல்துறை தலைமை இயக்குனருக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள பா.ஜ.க அலுவலகமான கமலாயத்தில், முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து நயினார் நாகேந்திரன் அநாகரிகமாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜயின் ‘அப்பாவை காணோம்’ என்ற பேச்சுக்கு எதிர்வினையாக, நயினார் நாகேந்திரன் இவ்வாறு பேசியதாகக் கண்டனங்கள் எழுந்துள்ளன.
தி.மு.க மற்றும் பா.ஜ.க இடையிலான உறவு விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்று ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.