"தமிழகத் தொழில் வளர்ச்சிக்கு இன்று கருப்பு நாள்" –டி.ஆர்.பி.ராஜா பரபரப்பு பேட்டி
பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகம் எழுப்பியுள்ள மாற்றுக்கருத்துக்களுக்கு, திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பிராஜா, ''தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு இன்றைய தினம் ஒரு கருப்பு நாள். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நீர்நிலைகள் இல்லாத மாற்று இடத்தை எளிதாகத் தேர்வு செய்துவிட முடியாது. சாதாரண கூகுள் மேப் சாட்டிலைட் வியூவைப் பார்த்தாலே இந்த உண்மை புரியும். மாற்று இடம் தேடுவதாகக் கூறுபவர்கள், அங்கும் நீர்நிலைகளோ அல்லது சுற்றுச்சூழல் பாதிப்புகளோ வராது என்பதற்கு என்ன நிச்சயம். பொறுப்புள்ள ஒரு அரசாங்கம் மற்றும் இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சராகத் திகழ்ந்த தங்களது தலைவர். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகுதான் பரந்தூர் இடத்தை முறைப்படி தேர்வு செய்தார். தற்போதைய சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் கொள்ளளவு விரைவில் 55 மில்லியனாக உயர்த்தப்பட உள்ள போதிலும், வரும் 2034-ஆம் ஆண்டிற்குப் பிறகு சென்னையின் வளர்ச்சிக்கு அது நிச்சயமாகப் போதாது. ஆனால், பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையம் சுமார் 10 கோடி பயணிகளைக் கையாளும் பிரம்மாண்டத் திறனுடன் எதிர்காலத் தொலைநோக்குப் பார்வையோடு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது 2026-இல் இருக்கும் நாம், இப்போதே இந்தத் திட்டப் பணிகளை தொடங்கினால் கூட விமான நிலையத்தைக் கட்டி முடிக்கக் குறைந்தது மூன்று ஆண்டுகள் வரை ஆகும் என்பதால், அது பயன்பாட்டிற்கு வரும் போது 2029 அல்லது 2030 ஆகிவிடும். தமிழகத்தின் அடுத்தகட்டப் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுவது மாநிலத்தின் முன்னேற்றத்தையே முடக்கும் செயல்'' என்றார்.

பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகம் முன்வைத்துள்ள மாற்றுக்கருத்துக்களுக்கு, திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்துள்ளார். தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு இன்றைய தினம் ஒரு கருப்பு நாள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத மாற்று இடத்தை எளிதாகத் தேர்வு செய்ய முடியாது என்று டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். கூகுள் மேப் செயற்கைக்கோள் காட்சிகளைப் பார்த்தாலே இந்த உண்மை விளங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.