முடிவுக்கு வந்த கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை!
நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களால் ஆரம்பிக்கப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவுக்குக் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிராம உத்தியோகத்தர் சங்கங்களுக்கும், பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் அமைச்சின் செயலாளருக்கும் இடையில் இன்று (17) இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி தொலைபேசி வழியே தொடர்புகொண்டதாகவும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத...

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொழிற்சங்க போராட்டத்தை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் அமைச்சின் செயலாளருடன் கிராம உத்தியோகத்தர் சங்கப் பிரதிநிதிகள் இன்று (17) நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது ஜனாதிபதி தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தையில் இணைந்து கொண்டார். எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் குறித்த விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.