PulseNews
அரசியல்

மாணவர்கள் போராட்ட எதிரொலி; மாநில தேர்வாணைய தலைவர் கைது

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகள் மற்றும் பிற அரசுப் பணி தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து, தேர்வு முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை நடத்தக்கோரி தலைநகர் ராஞ்சியில், கடந்த இரண்டு வாரங்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், குறிப்பிட்ட ஐந்து மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மேற்கொண்டனர். மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வந்தது. இதையடுத்து, அரசு சார்பில் போராட்டக்களத்தில் உள்ள மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும், இதில் மாணவர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால், போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த போராட்டத்தின் நீட்சியாக இன்று (10-08-26) மாணவர்கள் சட்டப்பேரவையை நோக்கி பேரணியாகச் சென்றனர். பேரணி சென்ற மாணவர்களைத் தடுக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன், தண்ணீரையும் பீய்ச்சியடித்தனர். இதனால், மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும், மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், ஜார்கண்ட் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் எல்.கியாங்டேவை சிறப்புப் புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர். மாநிலத்தின் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். தேர்வு முறைகேடுகள் குறித்துத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, கடந்த ஜூலை 22 அன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மாணவர்கள் போராட்ட எதிரொலி; மாநில தேர்வாணைய தலைவர் கைது
PulseNews சுருக்கம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணி தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, மாணவர்கள் கடந்த இரண்டு வாரங்களாக ராஞ்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று சட்டப்பேரவையை நோக்கி மாணவர்கள் பேரணியாகச் சென்றபோது, அவர்களைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்தச் சூழலில், தேர்வு முறைகேடு தொடர்பான புகார்களைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவரான எல்.கியாங்டேவை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தலைவராகப் பொறுப்பேற்ற இவர், முறைகேடு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கடந்த ஜூலை 22-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics