PulseNews
அரசியல்

உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், விவசாய பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி திமுக சார்பில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 03ஆம் தேதி(03.08.2026) நடைபெற்றது. அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்துத் தனிப்பட்ட முறையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இத்தகைய சூழலில் தான் பெண்கள் மற்றும் முதலமைச்சர் குறித்து அவதூறாகவும், இழிவாகவும் பேசியதாக எழுந்த புகாரின் பேரில், தவெக நிர்வாகிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சை கிழக்கு காவல் நிலைய போலீசார் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த 04ஆம் தேதி (04.08.2026) கைது செய்யப்பட்டார். இதனையடுத்து விசாரணைக்குப் பின்னர் அன்றைய தினமே உதயநிதி விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் த.வெ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக த.வெ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளர் பழ. செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “பெண்களுக்கு எதிராக இழிவுபடுத்தும் மற்றும் ஆபாசமான சொல்லாடல்களைப் பயன்படுத்தியதற்காக விளக்கம் கோரியும், நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் அதிகாரப்பூர்வ நோட்டீஸ் அனுப்ப வேண்டும். பொது இடத்தில் ஆபாசமாக நடந்துகொண்டதற்கும், பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தியதற்கும், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் உரிய பிரிவுகளின் கீழ் சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கி, முறையான வழக்கைப் பதிவு செய்யுமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். பெண்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாக்கும் தங்களின் சட்டப்பூர்வ அதிகார வரம்பிற்குட்பட்டு, தேசிய மகளிர் ஆணையம் இந்த மனுவை உடனடியாக பரிசீலித்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆனையத்திற்கு தேசிய மகளிர் ஆனையம் பரிந்துரைத்துள்ளது.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!
PulseNews சுருக்கம்

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை மீட்டெடுக்கவும், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யவும், டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி, கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தவெக அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதன் விளைவாக, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics