மின் கட்டணம் தொடர்பாக சின்னத்திரை நடிகையின் பரபரப்பு புகார்.. மின்வாரியம் தொடர்பு கொண்டும் விவரங்கள் பகிர மறுப்பு..
இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரியக் குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர், இதுவரை மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம் தொடர்பாக சின்னத்திரை நடிகை ஒருவர் வெளியிட்ட புகார் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மின்வாரிய அதிகாரிகள் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழு முகவரியைக் கேட்டுள்ளனர்.
அழைப்பை ஏற்ற அந்த நபர், விவரங்களை விரைவில் தருவதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். இருப்பினும், குறிப்பிட்ட அந்த நடிகை இதுவரை மின் இணைப்பு எண் மற்றும் முகவரி உள்ளிட்ட எந்தத் தகவலையும் மின்வாரியத்திடம் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.