PulseNews
அரசியல்

எதிர்க் கட்சித் தலைவரிடமும் பாராட்டு பெறும் சபாநாயகர்: ஜே.சி.டி பிரபாகர் பற்றி ஸ்டாலின் சொன்னதை பகிர்ந்த வைரமுத்து

தமிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இக்கட்சியின் சட்டமன்ற சபாநாயகராக ஜே.சி.டி பிரபாகர் உள்ளார். தற்போது சட்டப்பேரவையில் நடந்து வரும் கேள்வி நேரத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இருவரும் மோதிக் கொள்ளும் போது சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் இரு கட்சியினரையும் திறமையாக கையாண்டு வருவதாக கூறப்படுகிறது. பின்பக்கம் கண்ணாடியே இல்ல... அதிவேகமாக சென்ற அரசு பேருந்து; ஆபத்தான பயணம் இந்நிலையில், ஜே.சி.டி பிரபாகர் பற்றி முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது குறித்து கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ”முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நட்பின் நிமித்தமாய் நலம்கேட்கச் சென்றேன்; பொன்னாடை அணிவித்தேன் ஞானபீடத்தின் பெருமையறிந்து வீட்டுக்கே வந்து வாழ்த்திய அந்நாள் முதலமைச்சர், பெற்றுவந்த விருதுக்காக மீண்டுமொரு பொன்னாடை அணிவித்தார். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நட்பின் நிமித்தமாய் நலம்கேட்கச் சென்றேன்; பொன்னாடை அணிவித்தேன் ஞானபீடத்தின் பெருமையறிந்து வீட்டுக்கே வந்து வாழ்த்திய அந்நாள் முதலமைச்சர், பெற்றுவந்த விருதுக்காக மீண்டுமொரு பொன்னாடை அணிவித்தார் பொன்னாடைக்குப் பொன்னாடை “எதைக்... pic.twitter.com/l1gEd2P486 — வைரமுத்து (@Vairamuthu) August 22, 2026 பொன்னாடைக்குப் பொன்னாடை “எதைக் கொடுக்கிறாயோ அதையே பெறுவாய்” என்ற முதுமொழி என் மூளைக்குள் ஓடியது ஒருவரை ஒருவர் கொண்டாடிக் கொண்டோம் சட்டமன்ற நேரடி ஒளிபரப்பை முக்கால் மணிநேரம் இருவரும் கண்டுகொண்டிருந்தோம் "ஜே.சி.டி பிரபாகர் சிறப்பாக நடத்துகிறார் சட்டமன்றத்தை" என்றார். தி.மு.க தலைவர் "சட்டமன்றத்தின் ஆட்ட நாயகன்" என்று சமூக ஊடகங்கள் சபாநாயகரைப் பேசுகின்றன என்றேன் "அப்படியா" என்றார் ஓர் அழகான காஃபி குடித்து முடித்து வாழ்த்தி விடைகொண்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
எதிர்க் கட்சித் தலைவரிடமும் பாராட்டு பெறும் சபாநாயகர்: ஜே.சி.டி பிரபாகர் பற்றி ஸ்டாலின் சொன்னதை பகிர்ந்த வைரமுத்து
PulseNews சுருக்கம்

தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் உள்ள நிலையில், அக்கட்சியின் சட்டப்பேரவை சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் செயல்பட்டு வருகிறார். சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினரிடையே ஏற்படும் மோதல்களை, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மிகவும் திறமையாகக் கையாள்வதாகப் பாராட்டுகள் எழுந்துள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர்களின் நன்மதிப்பையும் அவர் பெற்று வருகிறார். இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்துகளைக் கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics