பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!

ஜனநாயகன்' திரைப்படத்திற்கு எதிராக ஐகோர்ட் கிளையில் மனு அவதூறு காட்சிகளை நீக்க பாப்பாபட்டி கிராம மக்கள் சார்பில் வழக்கு.

அப்பட்டமான பொய்யான காட்சிகள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவைச் சேர்ந்த பாப்பாபட்டி கிராம மக்கள் சார்பாக
சின்னச்சாமி என்பவர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு...,"நடிகர் விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் ஜூலை 23ம் தேதி திரையரங்க்குகளில் வெளியாகியது. இந்த படத்தின் தொடக்க மற்றும் முடிவுப் பகுதிகளில், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது போலவும், அங்கு வாக்களிக்க முற்படுபவர்களின் கைகள் வெட்டப்படுவது போலவும், பள்ளிச் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்படுவது போலவும் அப்பட்டமான பொய்யான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தவறாக சித்தரித்துள்ளனர்

பாப்பாபட்டி கிராம மக்கள் தங்களது உரிமைகளுக்காகவும், சட்டப் போராட்டங்களின் வழியிலும் போராடி வந்த வரலாற்றை மறைத்து, கிராமத்தை சாதி வெறி பிடித்த பகுதியாகவும் வன்முறை பூமியாகவும் தவறாக சித்தரித்துள்ளனர். இது கிராம மக்களின் கண்ணியத்திற்கும் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாப்பாபட்டி கிராம மக்கள் அளித்த புகார்களை ஆய்வு செய்து, படத்தில் உள்ள அவதூறு மற்றும் வன்முறையைத் தூண்டும் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். ஆட்சேபனைக்குரிய காட்சிகள் முழுமையாக நீக்கப்படும் வரை திரைப்படத்தை திரையரங்குகளிலோ அல்லது பிற ஊடகங்களிலோ திரையிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். கிராமத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காகப் படக்குழுவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சிவி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கு முடித்துவைப்பு

அப்போது, மத்திய அரசு தரப்பில்..,"ஜனநாயகன் திரைப்படத்தில் “பாப்பம்பட்டி” என்று தான் வந்துள்ளது. மனுதாரர் கிராமத்தை பற்றி கூறவில்லை என்றார். மனுதாரர் தரப்பில், இந்த கிராமத்தில்தான் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பிரச்சனை நடந்தது. அதைப் பற்றி படம் கூறியுள்ளது. எனவே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறினார். ஒரு ட்ரெய்லர் காட்சியில் எம்எல்ஏவை கட்டி வைத்து, சாட்டையால் அடிப்பது போல காட்சி உள்ளது, எம்எல்ஏக்கள் எல்லாம், அந்த காட்சியை நீக்க வேண்டும் என வழக்கு தொடுக்க இயலுமா என அண்ணா நீதிபதிகள் கேட்டனர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பாப்பம்பட்டி என்றுதான் படத்தில் கூறப்பட்டுள்ளது. இது போன்று பல கிராமங்கள் உள்ள இருக்கலாம். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி என்று கூறவில்லை. இந்த கிராமத்தை கூறவில்லை. பாப்பம்பட்டி என்று என்று தான் வந்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது, பாப்பம்பட்டி என்று பல பல கிராமங்கள் இருக்கலாம். சினிமா படங்களில் கற்பனை தவிர்க்க முடியாதது என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள பாப்பாபட்டி கிராம மக்கள் சார்பில், சின்னச்சாமி என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகம்' திரைப்படத்தில், தங்களது கிராமம் குறித்து அவதூறான மற்றும் பொய்யான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு, நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பித்துள்ளது.