59 வணிகக் கப்பல்களைத் திருப்பி அனுப்பிய அமெரிக்கா! ஹோர்முஸில் அதிரடி
ஈரான் மீதான கடற்படை முற்றுகையை (Naval Blockade) மீண்டும் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டுத் துறைமுகங்களுக்குச் செல்ல முயன்ற 59 வணிகக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மத்திய கட்டளையகம் இதனை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் அமெரிக்காவின் உத்தரவை மீறிச் செல்ல முயன்ற 3 கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதுடன், 2 கப்பல்களில் நேரடிச் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன. ஜூலை 14 முதல் மீண்டும் நடைமுறைக்கு வந்த இந்த ...

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டுத் துறைமுகங்களுக்குச் சென்ற 59 வணிகக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளன. இந்த நடவடிக்கையை அமெரிக்க மத்திய கட்டளையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜூலை 14 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த உத்தரவை மீறிச் சென்ற 3 கப்பல்களை அமெரிக்கப் படைகள் செயலிழக்கச் செய்துள்ளன. மேலும், சந்தேகத்திற்குரிய 2 கப்பல்களில் நேரடியாகச் சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.