PulseNews
அரசியல்

ராகுல் காந்தியை தேர்வு செய்யவில்லை என்றால்; த.வெ.க-வில் இருந்து காங்கிரஸ் விலகும்: அமைச்சர் ராஜேஷ் குமார்

இந்தியாவின் பிரதமராக தற்போது மோடி உள்ள நிலையில் அடுத்த பிரதமராக விஜய் வருவார் என்று த.வெ.க அமைச்சர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் இந்தியாவில் அடுத்த பிரதமராக யாரைத் தேர்ந்தெடுக்க மக்கள் விரும்புகிறார்கள் என்ற கேள்வியுடன் 'இந்தியா டுடே - சி வோட்டர்' அமைப்பு நடத்திய 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக் கணிப்பில், தமிழக முதலமைச்சரும் த.வெ.க தலைவருமான விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். ’இலங்கை அழைக்கிறது’: தாயகமா? தமிழகமா? இரண்டு தலைமுறைகளுக்கு இடையே நடக்கும் போராட்டம் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, பிரதமர் நரேந்திர மோடி 48.7 சதவீத வாக்குகளுடன் முதலிடத்திலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 27.1 சதவீத ஆதரவுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து 9.2 சதவீத வாக்குகளைப் பெற்று விஜய் மூன்றாவது இடத்தை அடைந்துள்ளார். இது த.வெ.க தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், 2029-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதலமைச்சர் விஜயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் பிரச்சாரத்தை த.வெக தொடர்ந்து முன்னெடுத்தால், நான் மற்றும் தனது காங்கிரஸ் கட்சி அமைச்சரான விஸ்வநாதன் (உயர்கல்வித் துறை அமைச்சர்) ஆகிய இருவரும் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையிலிருந்து விலகுவோம் என்று தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ். ராஜேஷ் குமார் ஞாயிற்றுக்கிழமை எச்சரித்துள்ளார். அதாவது, "2029 நாடாளுமன்றத் தேர்தலின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை த.வெ.க ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், தமிழக அமைச்சரவையில் உள்ள இரு காங்கிரஸ் அமைச்சர்களும் உடனடியாகத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அமைச்சரவையிலிருந்து விலகுவோம்" என்று ஞாயிற்றுக்கிழமை மார்த்தாண்டத்தில் நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டத்தில் ராஜேஷ் குமார் தெரிவித்தார். நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மற்றும் அதன் அராஜகமான, மக்கள் எதிர்ப்பு மற்றும் இளைஞர் எதிர்ப்பு கொள்கைகளுக்கு எதிராக ராகுல் காந்தி இடைவிடாமல் போராடி வருவதால், சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் காங்கிரஸ் கட்சி செல்வாக்கு பெற்று வருவதாக ராஜேஷ் குமார் கூறினார். நாடு முழுவதிலும் உள்ள வாக்காளர்களாலும் காங்கிரஸ் கட்சியாலும் அவர் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார் என்றார்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ராகுல் காந்தியை தேர்வு செய்யவில்லை என்றால்; த.வெ.க-வில் இருந்து காங்கிரஸ் விலகும்: அமைச்சர் ராஜேஷ் குமார்
PulseNews சுருக்கம்

தற்போதைய பிரதமர் மோடிக்கு மாற்றாக அடுத்த பிரதமராக விஜய் வர வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'இந்தியா டுடே - சி வோட்டர்' நடத்திய 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக் கணிப்பில், த.வெ.க தலைவரான விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதற்கிடையே, ராகுல் காந்தியை பிரதமராக முன்னிறுத்தவில்லை என்றால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார். த.வெ.க உடனான கூட்டணியில் இந்த நிபந்தனையை அவர் முக்கியமாக முன்வைத்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics