ஈழத்தமிழினப்படுகொலைக்கான நீதிக்காக உழைத்த அருட்தந்தை ஜாவியர் கிரால்டோ மொரேனோ மறைந்தார்
தென்னமெரிக்கா, கொலம்பியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கிறித்தவ அருட்தந்தையும், கிறித்துவ சபைத் (Jesuit) துறவியும், நீதி மற்றும் அமைதிக்கான போராட்டங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவரும், ஈழத்தமிழினத்திற்கு நிகழ்ந்த இனப்படுகொலைக்கெதிராக தீர்ப்பாயத்தை நிறுவுவதில் முன்னின்று உழைத்தவருமான அருட்தந்தை ஜாவியர் கிரால்டோ மொரேனோ (1944-2026) செவ்வாய்க்கிழமை (25) அன்று பொகோட்டாவில் காலமானார். 2013-ல் நடைபெற்ற 'சிறிலங்கா மீதான மக்கள் தீர்ப்பாயத்தின்' (பிறேமன் அமர்வு) நடுவர் குழுவில் இவர் இடம்பெற்றிருந்தார...

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கோரிப் போராடியவரும், புகழ்பெற்ற இயேசு சபைத் துறவியுமான அருட்தந்தை ஜாவியர் கிரால்டோ மொரேனோ (1944-2026) கொலம்பியாவின் பொகோட்டாவில் செவ்வாய்க்கிழமை (25) காலமானார். தென் அமெரிக்காவைச் சேர்ந்த இவர், நீதி மற்றும் அமைதிக்கான முன்னெடுப்புகளில் முக்கிய பங்காற்றியவர்.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற 'சிறிலங்கா மீதான மக்கள் தீர்ப்பாயத்தின்' (பிறேமன் அமர்வு) நடுவர் குழுவில் உறுப்பினராக இருந்து, ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு எதிரான நீதிக்காக இவர் தீவிரமாகப் பணியாற்றியுள்ளார்.