பிரம்மாண்ட அமெரிக்க ஏவுகணையை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா!
அமெரிக்காவின் FGM-148 Javelin பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணை (Anti-Tank Guided Missile) அமைப்பை கொள்முதல் செய்வதற்கான தனது முதல் ஒப்பந்தத்தில் இந்திய இராணுவம் கையெழுத்திட்டுள்ளது இந்த ஏவுகணையை 2009ஆம் ஆண்டு முதல்வாங்குவதற்கு இந்தியா முயற்சித்து வந்த நிலையில், தற்போது முதல்முறையாக கொள்முதல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் Foreign Military Sales (FMS) திட்டத்தின் கீழ், இதற்கான Letter of Offer and Acceptance ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செ...

அமெரிக்காவின் FGM-148 ஜாவெலின் ரக பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணைகளை வாங்குவதற்காக இந்திய இராணுவம் முதன்முறையாக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் வெளிநாட்டு இராணுவ விற்பனை (FMS) திட்டத்தின் கீழ், இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் இந்த ஏவுகணைகளை வாங்க இந்தியா முயற்சித்து வந்த நிலையில், தற்போது இந்த ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது. இந்த ஏவுகணை கொள்முதல் குறித்த 'Letter of Offer and Acceptance' ஆவணத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.