PulseNews
அரசியல்

மாறுகிறதா தமிழக பாஜக தலைமை? -டெல்லி பயணத்தின் பின்னணி

சமீபத்தில் பாஜகவில் தேசிய அளவில் பல்வேறு தலைவர்களின் பதவிகள் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக பாஜக தேசிய மகளிர் அணித் தலைவியாக இருந்த வானதி சீனிவாசன் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் பாஜகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவசரமாக நேற்று காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழக பாஜகவில் முக்கிய பொறுப்புகளுக்கு புது நியமனங்கள் செய்வது மற்றும் தமிழகத்தின் நிலவும் அரசியல் சூழல் குறித்து பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் மற்றும் பாஜக மூத்த தலைவர்களுடன் பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேச இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. நயினார் நாகேந்திரனைத் தொடர்ந்து வானதி சீனிவாசனும் டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக பாஜக தலைமை மாற இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது நயினார் நாகேந்திரனின் பெண்கள் குறித்த சமீபத்திய பேச்சுக்கள் சர்ச்சையில் சிக்கின. இதனால் டெல்லி பாஜக தலைமை அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போதைய தமிழக பாஜக தலைமையை மாற்றிவிட்டு வானதி ஸ்ரீனிவாசனுக்கு தமிழக பாஜக தலைவர் பதவி வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Nakkheeran12 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics