PulseNews
அரசியல்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!

இந்தியாவின் 80வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படும். இந்த முறை செங்கோட்டையில் Gen-Z-யின் தாக்கம் மேலோங்கியிருக்கும். இதற்கான திட்டத்தை அரசு தயாரித்துவிட்டது. டெல்லியில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல் முறையாக செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து தேசியப் பாடல் 'வந்தே மாதரம்' பாடப்படுகிறது.

இதுதொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் குமார் சிங் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்ததாவது, 80வது சுதந்திர தின விழாவை பிரதமர் மோடி டெல்லியின் செங்கோட்டையிலிருந்து தலைமையேற்பார். அழைக்கப்பட்டவர்களுக்கு மெட்ரோ சேவைகள் காலை 4 மணி முதல் இலவசமாக கிடைக்கும். தன்னார்வலர்கள், சக்கர நாற்காலிகள், கிளாக்க்ரூம், குடிநீர், கழிப்பறை மற்றும் ரெயின்கோட் போன்ற வசதிகளும் வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் அணுசக்தி, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் காட்டப்படும். இதனுடன், பெண் தொழில்முனைவோர், விவசாயிகள், கைவினைஞர்கள் மற்றும் பெயர் பெற்ற இளைஞர்கள் சிறப்பு விருந்தினர்களாக கௌரவிக்கப்படுவார்கள். சர்வதேச ஒலிம்பியாடில் பதக்கம் வென்ற பத்தொன்பது மாணவர்கள் கௌரவிக்கப்படுவார்கள். இந்த விழா 'வந்தே மாதரம்' 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கிறது. இது முதல் முறையாக செங்கோட்டையிலிருந்து பாடப்படும். இளைஞர்களின் பங்கேற்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன

இதற்கிடையில், சுதந்திர தின விழாவுக்கு முன்னதாக செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கூட்டத்தில் சந்தேகத்திற்குரிய மற்றும் தேடப்படும் நபர்களை அடையாளம் காண டெல்லி போலீஸ் 'அபிஜ்ஞான்' ஆப் மற்றும் ‘ஃபேஷியல் ரெகக்னிஷன் சிஸ்டம்’ பயன்படுத்தும். ஆகஸ்ட் 15 விழாவுக்காக டெல்லி போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகளின் சுமார் 15000 முதல் 20000 வீரர்கள் வரை பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரோன்-காத்தாடி பறக்கத் தடை

சுதந்திர தின விழாவுக்காக தலைநகரில் ஆகஸ்ட் 2 முதல் 16 வரை ட்ரோன்கள் உட்பட அனைத்து வகையான சிறிய வான்வழி தளங்களை பறக்க விடுவதற்கு டெல்லி போலீஸ் முழுமையான தடை விதித்துள்ளது. இதற்கு மேலாக, பாதுகாப்பு காரணங்களால் நினைவுச்சின்னத்தைச் சுற்றியுள்ள செங்கோட்டை அருகே காத்தாடி பறக்க விடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. BNSS-இன் பிரிவு 163ன் கீழ் வெளியிடப்பட்ட இந்த உத்தரவு ஆகஸ்ட் 16 வரை அமலில் இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
PulseNews சுருக்கம்

இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ளார். இந்த விழாவில் முதல்முறையாக 'வந்தே மாதரம்' பாடல் ஒலிக்கப்பட உள்ளதுடன், ஜென்-இசட் தலைமுறையினரின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது. இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை பறைசாற்றும் வகையில் அமையும் இந்த நிகழ்வில், சர்வதேச ஒலிம்பியாட் பதக்கம் வென்றவர்கள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.

பாதுகாப்பு காரணங்களுக்காக ஆகஸ்ட் 2 முதல் 16 வரை டெல்லியில் டிரோன்கள் மற்றும் காத்தாடி பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் பகுதியில் சந்தேக நபர்களைக் கண்டறிய முக அங்கீகார தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதுடன், சுமார் 15,000 முதல் 20,000 பாதுகாப்புப் படையினர் பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும், அழைப்பாளர்களுக்கு இலவச மெட்ரோ சேவை, குடிநீர் மற்றும் இதர அடிப்படை வசதிகள் வழங்கப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics