அடுத்த 35 வருடங்களுக்கு அனுரவை அசைக்கவே முடியாது : பாதுகாப்பு பிரதியமைச்சர் திட்டவட்டம்
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அடுத்த 35 ஆண்டுகளுக்கு அரசியல் ரீதியாக சவால் விடக்கூடிய தலைவர் இந்த நாட்டின் அரசியல் களத்தில் இல்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அறிவையும், நாட்டின் மீதான அவரது எல்லையற்ற அர்ப்பணிப்பையும் பாராட்டிய அமைச்சர், மக்கள் அவரை ஒரு மாபெரும் ஜனாதிபதி என்று அழைப்பதற்குப் பழகிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அரசியல் ரீதியாக போட்டியிடக்கூடிய தலைவர் எவருமில்லை அடுத்த 25, 30 அல்லது...

அடுத்த 35 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை அரசியல் ரீதியாக சவால் செய்யக்கூடிய எவரும் இந்த நாட்டில் இல்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அறிவு மற்றும் நாட்டின் மீதான அவரது அர்ப்பணிப்பை பாராட்டிய அமைச்சர், மக்கள் அவரை ஒரு மாபெரும் ஜனாதிபதியாக ஏற்றுக்கொண்டு அழைக்க பழகிக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.