இனி வாட்ஸ்அப்பிலேயே போலீஸ் உதவி: 'தாம்பரம் வாட்ஸ்அப் காப்' புதிய சேவை அறிமுகம்
பொதுமக்களுக்குக் காவல்துறை சேவைகளை விரைவாக வழங்கவும், அவசரகால உதவிகளை உடனடியாகச் சென்றடையச் செய்யவும் தாம்பரம் மாநகரக் காவல்துறை 'தாம்பரம் வாட்ஸ்அப் காப்' (Tambaram What'sCop) என்ற செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) சார்ந்த வாட்ஸ்அப் சாட்பாட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. '93442 22100' என்ற எண்ணில் இயங்கும் இந்தச் சேவை மூலம் பெண்கள் பாதுகாப்பு, நேரலை இருப்பிடம் பகிர்வு, பூட்டிய வீடுகள் கண்காணிப்பு மற்றும் ரகசியப் புகார்கள் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகளைப் பொதுமக்கள் எளிதாகப் பெற முடியும். பொதுமக்களுக்குக் காவல்துறை சேவைகளை விரைவாக வழங்கவும், அவசரகால உதவிகளை உடனடியாகச் சென்றடையச் செய்யவும் தாம்பரம் மாநகரக் காவல்துறை ‘தாம்பரம் வாட்ஸ்அப் காப்’ (Tambaram What'sCop) என்ற செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) சார்ந்த புதிய வாட்ஸ்அப் சாட்பாட் சேவையைத் தொடங்கியுள்ளது. 👮Tambaram WhatsCop (AI Assistant)👮 Your Police Assistance — Just a Hi Away! Send “Hi” to 93442 22100 to begin. #tambaramcitypolice #WhatsCop #AIChatbot #WhatsAppChatbot pic.twitter.com/hZHK4VtiDk — TAMBARAM CITY POLICE (@COPTBM) August 8, 2026 பயன்படுத்துவது எப்படி? தமிழ் மற்றும் ஆங்கில ஆகிய இரு மொழிகளிலும் கிடைக்கக்கூடிய இச்சேவையை பெற, பொதுமக்கள் 93442 22100 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ எனச் செய்தி அனுப்பியோ அல்லது காவல்துறை வெளியிட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தோ பயன்படுத்தலாம். முக்கிய அம்சங்கள் & சேவைகள்: பெண்கள் பாதுகாப்பு (‘Track My Journey’): தனியாகப் பயணம் செய்யும் பெண்கள் தங்களது பயண விவரங்களைப் பதிவிடலாம். பாதையில் மாற்றம் அல்லது தேவையின்றி அதிக தாமதம் ஏற்பட்டால் காவல்துறை உடனடியாகச் செயல்படும். நேரலை இருப்பிடம் (Live Location): ஆபத்து அல்லது அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்களின் இருக்கப்பிடத்தை நேரடியாகக் காவல்துறையுடன் பகிர்ந்துகொள்ளலாம். ரகசியப் புகார்கள்: போதைப்பொருள் கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் குறித்துப் பொதுமக்கள் பெயர் வெளியிடாமல் ரகசியமாகப் புகாரளிக்கலாம். பூட்டிய வீடுகள் கண்காணிப்பு: வெளியூர் செல்லும் பொதுமக்கள் பூட்டியிருக்கும் தங்கள் வீட்டின் விவரங்களைப் பதிவிட்டால், இரவு ரோந்துப் படையினர் (இரவு 10 முதல் காலை 6 மணி வரை) சிறப்பு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். இதர சேவைகள்: போக்குவரத்து நெரிசல் மற்றும் விதிமீறல்களைப் புகைப்படங்களுடன் புகாரளித்தல், திருடப்பட்ட மொபைல்களை முடக்கும் சி.இ.ஐ.ஆர் (CEIR) வசதி, சைபர் குற்றப் புகார்கள் பதிவு மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களைக் கண்டறியும் வசதிகள் இதில் உள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், அவசரக்காலப் பதிலளிப்பை விரைவுபடுத்தவும் இந்த ஏ.ஐ வாட்ஸ்அப் சேவையைப் பொதுமக்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தாம்பரம் மாநகரக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தாம்பரம் மாநகரக் காவல்துறை பொதுமக்களுக்குத் துரிதமான சேவைகளை வழங்கவும், அவசரகால உதவிகளை உடனுக்குடன் கொண்டு சேர்க்கவும் 'தாம்பரம் வாட்ஸ்அப் காப்' (Tambaram What'sCop) என்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய வாட்ஸ்அப் சாட்பாட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் 93442 22100 என்ற எண்ணிற்கு 'Hi' என மெசேஜ் செய்தோ அல்லது க்யூஆர் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்தோ தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இந்தச் சேவையைப் பெறலாம்.
இந்த வசதியின் மூலம் பெண்கள் பாதுகாப்பு, நேரலை இருப்பிடத்தைப் பகிர்தல், பூட்டிய வீடுகளைக் கண்காணித்தல் மற்றும் ரகசியப் புகார்களை அளித்தல் போன்ற பல்வேறு சேவைகளைப் பொதுமக்கள் எளிதாகப் பெற முடியும். மேலும், சைபர் குற்றங்கள், போக்குவரத்து விதிமீறல்கள் குறித்துப் புகாரளிப்பது, திருடப்பட்ட மொபைல்களை முடக்குவது மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களை அறிந்துகொள்வது போன்ற வசதிகளும் இதில் வழங்கப்பட்டுள்ளன.