PulseNews
அரசியல்

சட்டப்பேரவை மாண்பு இதுதானா? திமுக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தவெக மீது பகீர் குற்றச்சாட்டு!

தமிழக சட்டப்பேரவை மாண்பு காக்கப்பட வேண்டும் என்று திமுக அரசின் முன்னாள் சபாநாயகர் அப்பாவு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

2021-ல் திமு கழகம் ஆட்சிக்கு வந்ததும் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைப்படி
பேரவை சார்பாக பல மாநில சட்டமன்றங்களுக்கு சென்று நேரடி ஆய்வு செய்தபின் கேள்வி நேரமும், முக்கிய நிகழ்வுகளும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதிலுறைகளும் பேரவை விதிகள், மரபுகளுக்குட்பட்டு பேரவையின் மாண்போடு முதன்முதலில் சட்டமன்ற நடவடிக்கைகள் ஒளிபரப்பப்பட்டன.

திமுக ஆட்சியில்தான்..

மேலும் திமு கழக ஆட்சியில்தான் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கையடக்கக் கணினி வழங்கப்பட்டு காகிதமில்லா சட்டமன்றம் உருவாக்கப்பட்டது வரலாறு. 1921 முதல் 2021 வரை சட்டமன்ற பதிவுகள் அனைத்தும் Online-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு உலகின் எந்த மூலையில் இருந்தும் சட்டமன்ற பதிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்ததும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் என்பதுதான் சட்டமன்ற வரலாறு.

சட்டமன்ற நடவடிக்கைகள் முழுமையாக நேரலை செய்தால், ஏதேனும் உறுப்பினர்கள் தவறுதலாக ஒரு கருத்தை பேசி அதன் மூலம் மக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டுவிட‌க் கூடாது என்பதற்காக நேரலையை 10 நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்பலாம் என்றும் இது குறித்து எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சியும் வழங்கி முகஸ்டாலின் 2.0 ஆட்சியில் நடைமுறை படுத்த வேண்டும் என்பதுதான் கடந்த திமுக ஆட்சியின் நோக்கம்.

10 நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்பு

தற்போது அமைச்சர்கள் சட்டமன்றத்தில் மரபு மீறி பேசும் வார்த்தைகளை பேரவை தலைவர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்த பின்பும், ஆளும் கட்சி நிர்வாகிகள் ரீல்ஸ் உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படுவதை தடுப்பதற்காகவே 10 நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்பு செய்யவேண்டும் என்று திமுகழக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது.

எது சட்டமன்ற மாண்பு?

பேரவைக்கு வெளியே எதிர்க்கட்சி MLA ஒருவர் முதல்வரை மிரட்டும் தொனியில் பேசி உள்ளது பேரவை சம்பந்தப்பட்ட விஷயம் என்று அவை உரிமை குழுவுக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்தால், எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேரவைக்குள் வைத்து‌ பூட்டுவேன் என்றும் கொத்து புரோட்டா போட்டுவிட்டேன் என்றும், Dash Dash என்று முதல்வர் பேரவைக்கு வெளியே மிரட்டியதும் அவை உரிமை குழுவுக்கு அனுப்புவதுதான் சட்டமன்ற மாண்பு.

6 அதிமுக MLA-க்கள் ராஜினாமா விஷயம் நீதிமன்றத்தில் இருக்கிறது என்றால் திமுக MLA பேசிய விஷயமும் நீதிமன்றத்தில் இருக்கிறது என்று இரண்டையும் ஒரே நிலையில் பார்ப்பதற்கு பதிலாக ஒன்றை ஏற்பதும் மற்றொன்றை நிராகரிப்பதும் பேரவை மாண்பல்ல.

வரம்பு மீறி தகாத வார்த்தைகளால் வம்பிழுப்பதா?

எதிர்க்கட்சியினர் முன்வைக்கின்ற பொது நலம் சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் நேரடியாக பதில் அளிக்க இயலாமல் வரம்பு மீறி தகாத வார்த்தைகளை பயன்படுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்களை வம்புக்கு இழுக்கும்போது எதிர்கட்சியினர் பயன்படுத்தும் வார்த்தைகள் மட்டும் பூதாகரமாக்கப்படுவதை தவிர்க்கப்பட வேண்டும் என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சட்டப்பேரவை மாண்பு இதுதானா? திமுக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தவெக மீது பகீர் குற்றச்சாட்டு!
PulseNews சுருக்கம்

தமிழக சட்டப்பேரவையின் மாண்பைக் காக்க வேண்டும் என திமுக முன்னாள் சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முதல்வர் ஸ்டாலினின் ஆலோசனையின்படி பிற மாநில சட்டமன்றங்களுக்குச் சென்று ஆய்வு செய்ததாகவும், அதன் அடிப்படையில் சட்டப்பேரவை நிகழ்வுகள் விதிகள் மற்றும் மரபுகளுக்கு உட்பட்டு கண்ணியமாக நடைபெறுவதை உறுதி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது தவெக மீது அவர் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics