PulseNews
அரசியல்

“வெள்ளையனே வெளியேறு!” முழக்கத்துடன் தஞ்சையில் தொழிலாளர்கள்–விவசாயிகள் மறியல்

தஞ்சாவூர்: “வெள்ளையனே வெளியேறு... சுதந்திரப் போராட்ட பாரம்பரியத்தை முன்னெடுப்போம்... இந்தியாவை காப்போம்... இந்திய மக்களை காப்போம்” என்ற முழக்கங்களுடன், மத்திய அரசின் தொழிலாளர், விவசாயி மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சாவூர், பேராவூரணி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சம்யுக்த கிஷான் மோர்ச்சா மற்றும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டத்திலும் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தல்

போராட்டத்தில், தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்கும் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். தொழிற்சங்க உரிமைகளுக்கு முழுமையான உத்தரவாதம் அளிக்க வேண்டும். நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும்.

தொழிலாளர்கள் மீது அமல்படுத்தப்படும் அடக்குமுறை சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உரிய சமூக பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

விவசாயிகளின் கோரிக்கைகள்

விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். விவசாயத்துக்கு தேவையான இடுபொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உரத்தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். பயிர் காப்பீடு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

நில ஆர்ஜிதம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

மேலும், காவிரி நீர் தொடர்பான முக்கிய பிரச்சினையாக கருதப்படும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்டது.

பொதுத்துறை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். தேசிய பணமாக்கல் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

100 நாள் வேலைத்திட்டத்தை முறையாக செயல்படுத்தி, தொழிலாளர்களுக்கு உரிய வேலை மற்றும் ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தஞ்சாவூரில் 200 பேர் கைது

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு தொமுச மாவட்ட செயலாளர் கு.சேவியர், ஏஐடியுசி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் ரவி, ஏஐசிசிடியு மாவட்டத் தலைவர் ராஜன், ஹெச்.எம்.எஸ். மாவட்டச் செயலாளர் சின்னப்பன், யூடியூசி மாவட்டத் தலைவர் மோகன்தாஸ், ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகிகள் என்.வி.கண்ணன், ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன், சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் மாலதி சிட்டிபாபு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ஏ.மாரியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.அபிமன்னன், என்.சரவணன், எஸ்.செல்வராஜ், மாநகர செயலாளர் எம்.வடிவேலன், தஞ்சை ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராசு, சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் கே.அன்பு மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், அரங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேராவூரணியில் 17 பேர் கைது

பேராவூரணி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம் கண்டன உரையாற்றினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சிதம்பரம், ரவி, சிவனேசன் மற்றும் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

பட்டுக்கோட்டையில் 37 பேர் கைது

பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.வாசு தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, ஒன்றிய செயலாளர் எஸ்.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் கு.பெஞ்சமின், ஒன்றியத் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வன், சிவகாமி, ஓய்வூதியர் சங்கம் சிவ.ரவி, சிஐடியு என்.கந்தசாமி, கட்டுமானத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் காளிதாஸ், மதுக்கூர் அய்யநாதன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 37 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்பான கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. தொழிலாளர் உரிமைகள், விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, பொதுத்துறை பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“வெள்ளையனே வெளியேறு!” முழக்கத்துடன் தஞ்சையில் தொழிலாளர்கள்–விவசாயிகள் மறியல்
PulseNews சுருக்கம்

மத்திய அரசின் தொழிலாளர், விவசாயி மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். "வெள்ளையனே வெளியேறு" மற்றும் இந்தியாவைக் காப்போம் போன்ற முழக்கங்களை எழுப்பி, சுதந்திரப் போராட்ட பாரம்பரியத்தை முன்னெடுத்து அவர்கள் இந்த எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.

தஞ்சாவூர், பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் பல்வேறு தொழிற்சங்கங்களும் விவசாய அமைப்புகளும் இணைந்து மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics